செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

உலகிலேயே மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 132 ஆவது இடத்தில்!

Posted: 2015-04-25 07:43:20
உலகிலேயே மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 132 ஆவது இடத்தில்!

உலகிலேயே மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 132 ஆவது இடத்தில்!

உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடு என்ற பெருமையை சுவிட்ஸர்லாந்து பெற்றுக்கொண்டுள்ளது.

ஐ.நா. சபையின் கீழ் இயங்குகிற ‘சஸ்டைனபிள் டெவலப்மெண்ட் சொல்யூஷன்ஸ் நெட்வொர்க்’ (Sustainable Development Solutions Network) என்ற அமைபப்பு 158 நாடுகளை இவ்வாறு தரப்படுத்தியுள்ளது.

தனிநபர் வருமானம், மனிதர்களின் ஆரோக்கியமான ஆயுட்காலம், சமூக ஆதரவு, சுதந்திரம் என பல்வேறு விடயங்களைக் கொண்டு இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை ஐஸ்லாந்தும் மூன்றாவது இடத்தை டென்மார்க்கும் நான்காவது இடத்தை நோர்வேயும் ஐந்தாவது இடத்தை கனடாவும் பிடித்துள்ளன.

இந்தப் பட்டியலில் இலங்கைக்கு 132 ஆவது இடமும் இந்தியாவிற்கு 117 ஆவது இடமும் பாகிஸ்தானுக்கு 81 ஆவது இடமும் கிடைத்துள்ளன.

இதேவேளை, பங்களாதேஷ் 109 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. உக்ரைனுக்கு 111 ஆவது இடமும், பாலஸ்தீனத்துக்கு 108 ஆவது இடமும், ஈராக்கிற்கு 112 ஆவது இடமும் கிடைத்துள்ளன.

வளர்ந்த நாடுகளான அமெரிக்காவுக்கு 15 ஆவது இடமும் இங்கிலாந்துக்கு 21 ஆவது இடமும் சிங்கப்பூருக்கு 24 ஆவது இடமும் சவூதி அரேபியாவுக்கு 35 ஆவது இடமும் ஜப்பானுக்கு 46 ஆவது இடமும் சீனாவுக்கு 84 ஆவது இடமும் கிடைத்துள்ளன.

உலகிலேயே மகிழ்ச்சி குறைந்த 5 நாடுகள் பட்டியலில் டோகோ, புரூண்டி, சிரியா, பெனின், ருவாண்டா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.