செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

ஹொண்டா நிறுவனத்தின் முதல் விமானம் வெற்றிகரமாகப் பறந்தது!

Posted: 2015-04-30 06:04:18 | Last Updated: 2015-04-30 06:16:23
ஹொண்டா நிறுவனத்தின் முதல் விமானம் வெற்றிகரமாகப் பறந்தது!

ஹொண்டா நிறுவனத்தின் முதல் விமானம் வெற்றிகரமாகப் பறந்தது!

கார், மோட்டார் சைக்கிள் மற்றும் ரோபோ தயாரிப்பு என ஓட்டோமொபைல் துறையின் பல்துறை வித்தகனாகத் திகழும் ஜப்பானை சேர்ந்த ஹொண்டா நிறுவனத்தின் முதல் விமானம் வெற்றிகரமாக பறந்தது. ஜப்பான் நாட்டின் சென்டாய் நகரிலிருந்து ரோக்கியோவுக்கு தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது ஹொண்டாஜெட்.

மேலும், வெற்றிகரமாக முதல் பயணத்தை பதிவு செய்ததைத் தொடர்ந்து, இந்த விமானத்துக்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் முற்பதிவுகளும் விசாரணைகளும் வந்துகொண்டிருக்கின்றன என ஹொண்டா தெரிவித்துள்ளது. கோடீஸ்வரர்கள் ஆர்வமுடன் இந்த விமானத்தை வாங்க ஆர்வம் காட்டுவதில் அர்த்தமில்லாமலா இருக்கும்.

இடவசதி

இதே வகை விமானங்களுடன் ஹொண்டாஜெட் விமானத்தை ஒப்பிடும்போது, 20 சதவீதம் கூடுதல் இடவசதியை பெற்றிருக்கிறது. அதற்கு காரணம் என்ன தெரியுமா?

இந்த விமானத்தின் என்ஜின் இறக்கையின் மேல்புறத்தில் உள்ள தாங்கி மீது நிறுத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம், இறக்கையின் அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் காரணமாக சிறந்த இடவசதி கொண்டதாக உருவாக்கியுள்ளனர்.
ஹொண்டா ஜெட்டில் ஜி.டி. ஹொண்டா எச்எஃப் 120 என்ஜின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த என்ஜின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் இணைந்து ஹோண்டா வடிவமைத்துள்ளது. இந்த என்ஜின், விமானம் மேலே எழும்பும்போது 2050 lb-ft த்ரஸ்ட்டை அளிக்கும்.

அதிர்வுகள் குறைவு

இறக்கையின் மேலே உள்ள தாங்கியில் என்ஜின் பொருத்தப்பட்டிருப்பதால், அதிர்வுகளும், கபினுக்குள் சத்தமும் மிக குறைவாக இருக்கும். இதனால், சொகுசான, இனிமையான பயண அனுபவத்தை வழங்குமாம். இதுவும் கோடீஸ்வரர்களை ஈர்க்க முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

அதிகபட்ச பறக்கும் வேகம்

ஹொண்டா ஜெட்டில் இரண்டு என்ஜின்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இவை இரண்டும் சேர்ந்து அதிகபட்சமாக 780 கிமீ வேகம் வரை விமானத்தை பறக்கச் செய்யும். மேலும், நிமிடத்திற்கு 3 ஆயிரத்து 990 அடி உயரம் வரை மேல் எழச்செய்யும். அதிகபட்சமாக 30ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும்.

எரிபொருள் சிக்கனம் ஹொண்டாவின் மோட்டார் சைக்கிள்கள், கார்கள் போன்றே இந்த விமானமும் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு போட்டியான வடிவங்களுடன் ஒப்பிடும்போது 15 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும்.

ஓடுபாதை அளவு

இந்த ஹொண்டா ஜெட் விமானத்தை 4 ஆயிரம் அடி நீளத்துக்கும் குறைவான நீளம் கொண்ட ஓடுபாதையில் மேலே ஏற்றவும், 3,000 அடி நீளத்துக்கும் குறைவான ஓடுபாதையில் தரையிறக்கவும் முடியும்

இதன் உடல் அமைப்பு அலுமினியத்திற்கு பதிலாக கார்பன் ஃபைபரில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டமைப்பும் வெகு சிறப்பானதாகவும், சிறந்த ஏரோடைனமிக் கொண்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இருக்கை வசதி

இலகு ரக வர்த்தக பிரிவில் தனிநபர் பயன்பாட்டு வகையை சேர்ந்த இந்த புதிய ஹொண்டாஜெட் விமானத்தில் 2 விமானிகள் உட்பட அதிகபட்சமாக 7 பேர் பயணிக்கலாம்.

வசதிகள்

பயணிகளே ஏசி, மியூசிக் சிஸ்டம், விளக்குகளை மொபைல்போன்கள் மூலம் விருப்பம்போல் கட்டுப்படுத்திக்கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டிருக்கும்.
ஏவியோனிக்ஸ் சிஸ்டம்

அடுத்த தலைமுறை கார்மின் ஜி3000 ஏவியோனிக்ஸ் சிஸ்டம் மூலம் விமானிகளுக்கான கட்டுப்படுத்தும் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில், டியூவல் டச் ஸ்கிரீன் கன்ட்ரோலர்கள் மற்றும் அதிதுல்லியமாக தகவல்களை காண்பிக்கும் 3 திரைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை ஒரு விமானி மூலம் அல்லது இரு விமானிகள் மூலமாகவும் இயக்க முடியும்.

குவியும் முற்பதிவுகள்

இதுவரை ஹொண்டாஜெட் விமானத்துக்கு 100 முற்பதிவுகளை ஹொண்டா நிறுவனம் பெற்றிருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் விமானங்களை விநியோகம் செய்ய ஹொண்டா திட்டமிட்டுள்ளது.