செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

யாழில் இராணுவம் நடத்தும் வெசாக் கண்காட்சி ஆரம்பம்!

Posted: 2015-05-03 23:43:06
யாழில் இராணுவம் நடத்தும் வெசாக் கண்காட்சி ஆரம்பம்!

யாழில் இராணுவம் நடத்தும் வெசாக் கண்காட்சி ஆரம்பம்!

வெசாக் தினத்தில் ஒவ்வொரு வருடமும் இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் வெசாக் கண்காட்சியை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வெசாக் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணப் பட்டணமும் தர்ம எழுச்சியும் என்ற தொனிப்பொருளில் இந்த வருடத்துக்கான வெசாக் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

வெசாக் பந்தலை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த, வட மாகாண பொலிஸ் மா அதிபர் பெரேரா ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

பிரித் ஓதலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் சகல மதத் தலைவர்களும் கலந்து கொண்டனர். பொதுமக்களும் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர்.