செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மன்னார் அல்லிராணி கோட்டையை பாதுகாக்க நடவடிக்கை

Posted: 2015-05-15 02:20:46
மன்னார் அல்லிராணி கோட்டையை பாதுகாக்க நடவடிக்கை

மன்னார் அல்லிராணி கோட்டையை பாதுகாக்க நடவடிக்கை

வரலாற்று சிறப்பு மிக்க மன்னார் சிலாவத்துறை அல்லிராணி கோட்டையை பாதுகாக்க கரையோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் என்பன நடவடிக்கை எடுத்துள்ளது.

நீண்டகாலமாக மன்னார் மாவட்டத்தின் சமூக ஆர்வலர்கள் அல்லிராணி கோட்டை அழிவடைந்து வருகின்றமை தொடர்பாக பல்வேறு மட்டங்களில் அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரிவந்தனர்.

இந்நிலையில் கரையோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் தொல்பொருள் ஆராட்சி திணைக்களம் என்பன இணைந்து அல்லிராணி கோட்டையை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

சிதைவடைந்து செல்லும் அல்லிராணி கோட்டையை பாதுகாத்து புனரமைப்பதுடன் மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது இதன்நோக்கமாகும்.

இதற்கென பாதுகாப்பு அணை அமைக்க கரையோர பாதுகாப்பு திணைக்களம் 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு பாதுகாப்பு அணை அமைக்கும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, தொல்பொருள் ஆராய்சித் திணைக்களம் அல்லிராணி கோட்டையின் கட்டடுமான பணிகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி செய்த காலப்பகுதியில் குறித்த அல்லிராணி கோட்டை இலங்கையின் முதலாவது பிரித்தானிய ஆளுநர் பற்றிக் நோர்த்தின் வாசஸ்தலமான விளங்கியுள்ளது. அது டொரிக் மண்டபம் என அழைக்கப்படுகிறது. இக்கட்டடத்தை கி.பி 1804 ஆண்டு ஆளுநர் பற்றிக் நோர்த் கிரேக்க கட்டடக் கலையை கொண்ட டொரிக் தூண்களைக் கொண்டு அமைத்தார் எனக் கூறப்படுகிறது.

கடல் அருகே உள்ள கற்பாறை ஒன்றின் மேல் உருவாக்கப்பட்டுள்ள இக்கடடடத்தின் கீழ்ப் பகுதியில் நான்கு அறைகளும் மேல் மாடியில் பெரிய சாப்பாட்டு அறையும் ஆளுநரின் உறங்கும் அறையும் உள்ளது.

இந்த வீட்டில் இருந்து கொண்டச்சி குடாவில் நடைபெற்ற முத்து அகழ்வைக் காண்காணிக்கும் ஆளுநரின் வதிவிடமாக விளங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.