செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

பிரபல நாதஸ்வர மேதை பஞ்சாபிகேசன் காலமானார்

Posted: 2015-06-26 01:49:05 | Last Updated: 2015-06-26 01:52:39
பிரபல நாதஸ்வர மேதை  பஞ்சாபிகேசன் காலமானார்

பிரபல நாதஸ்வர மேதை பஞ்சாபிகேசன் காலமானார்

பிரபல நாதஸ்வர மேதை முருகப்பா பஞ்சாபிகேசன் தனது 91ஆவது வயதில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார்.

தற்போது கொழும்பில் வசித்து வந்த அவர் சுகயீனம் காரணமாக கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அங்கு காலமானார்.

சாவகச்சேரி, சங்கத்தானையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது 15ஆவது வயதில் முதல் கச்சேரியை அரங்கேற்றினார்.

இவர் கலைக்கு ஆற்றிய சேவையைக் கருத்திற்கொண்டு 2010ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.

லயஞான குபேர பூபதி, இசை வள்ளல், நாதஸ்வர கலாமணி, நாதஸ்வர இசை மேதை, நாதஸ்வர சிரோண்மணி, நாதஸ்வர கான வாரிதி, சுவர்ண ஞான திலகம், சிவகலாபூஷணம், கலாபூஷணம் போன்ற பட்டங்களையும் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

இவரது இறுதிக்கிரியை எதிர்வரும் திங்கட்கிழமை சாவகச்சேரியில் நடைபெறவுள்ளது.