செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

நாசா அனுப்பிய ஹொரைசான் விண்கலம் புளூட்டோவை நெருங்கியது

Posted: 2015-07-14 10:47:43
நாசா அனுப்பிய ஹொரைசான் விண்கலம் புளூட்டோவை நெருங்கியது

நாசா அனுப்பிய ஹொரைசான் விண்கலம் புளூட்டோவை நெருங்கியது

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் நியூ ஹொரைசான் விண்கலம், சூரிய மண்டலத்தின் கடைசிக் கிரகமாகிய புளூட்டோவை நெருங்கியுள்ளது.

2006ஆம் ஆண்டில் பயணத்தைத் துவங்கிய நியூ ஹொரைசான், கடந்த 9 வருடங்களாக தொடர்ந்து பயணம் செய்து, சூரியக் குடும்பத்தின் வெளிவிளிம்பை நெருங்கியுள்ளது.

இதற்காக இந்த விண்கலம் ஐநூறு கோடி கிலோமீட்டர்கள் பயணித்துள்ளது.

புளூட்டோ கிரகத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த விண்கலம், அச்சிறிய கிரகத்தை நெருங்கியதை அடுத்து, இத்திட்டக் குழுவின் உறுப்பினர்கள் , அமெரிக்க கொடிகளை அசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

புளூட்டோவை ஆராய்வதற்காக அனுப்பப் பட்டிருக்கும் நியூ ஹொரைசான் விண்கலம். புளூட்டோ கிரகம் கைப்பர் பெல்ட் எனப்படும் சூரிய வலயத்தின் விளிம்பில் உள்ளது. இது வெற்றிட வலயம் என முன்னர் கருதப்பட்டது. ஆனால், இதில் லட்சக்கணக்கான உறைபனி உலகங்களும், விண்கற்களும் உலவுவதாக விஞ்ஞானிகள் தற்போது நம்புகின்றனர். நானூற்று அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன்னால் நமது சூரிய குடும்பம் உருவானபோது ஓரமாக ஒதுங்கிய குப்பை இவை.

நியூ ஹொரைசான் விண்கலம், புளூட்டோவையும் அதன் 5 நிலவுகளையும் மிக வேகமாக சுற்றிவந்து, சூரிய குடும்பம் குறித்து இதுவரை நாம் அறிந்திராத பல செய்திகளை சேகரித்து வருகிறது.

நியூ ஹொரைசான் மூலமாக கைப்பர் பெல்ட் வலயத்தில் உள்ள விஷயங்களை முதல் முறையாக நெருங்கிப் பார்க்கப்போகிறோம். இதுவரை தொலைநோக்கி வழியாக மட்டுமே இந்தப் பகுதியைப் பற்றி விஞ்ஞானிகள் அறிந்துள்ளனர். முதல் முறையாக மனிதன் அனுப்பிய கலன் இந்தப் பகுதிக்குச் சென்றுள்ளது. புதன்கிழமையன்று, நியூ ஹொரைசான் புளூட்டோவை நெருங்கி எடுத்த முதல் புகைப்படங்கள் பார்க்கக் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.