செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

பூமியைப் போன்ற கிரகம்! கெப்ளர் கண்டுபிடித்தது!!

Posted: 2015-07-23 00:07:50 | Last Updated: 2015-07-23 00:36:34
பூமியைப் போன்ற கிரகம்! கெப்ளர் கண்டுபிடித்தது!!

பூமியைப் போன்ற கிரகம்! கெப்ளர் கண்டுபிடித்தது!!

பூமி போன்று இன்னொரு கிரகம் இருக்கிறதா என்று நீண்ட காலமாக நாசா ஆய்வு நடத்தி வந்த நிலையில் தற்போது இன்னொரு பூமியை கெப்ளர் டெலஸ்கோப் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது பூமியிலிருந்து 150 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வரும் கெப்ளர் தொலைநோக்கியானது, இதுவரை 1028 கிரகங்களையும், 4661 கிரகம் போன்றவற்றையும் கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கெப்ளர் தொலைநோக்கி கிட்டத்தட்ட பூமி போலவே உள்ள ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாகவும். இதுகுறித்த ஆய்வின் கடைசிக் கட்டத்தில் விஞ்ஞானிகள் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

இதற்கு கெப்ளர் 186எப் எனறு பெயரிடப்பட்டது. இது பூமியலிருந்து 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. நம்மைப் போலவே உள்ள ஒரு கிரகமாக இது கருதப்படுகிறது. பூமியை விட பெரியது அதேபோல இந்த ஆண்டு ஜனவரியில் கெப்ளர் 438 பி, 442 பி என மேலும் இரு கிரகங்களை கெப்ளர் கண்டுபிடித்தது.

இதில் பி கிரகமானது பூமியை விட 12 சதவீதம் பெரிதாகும். 442 பி கிரகமானது 33 சதவீதம் பெரிதாகும். ஜூலை மாதத்தில் கெப்ளர் அதே நட்சத்திரத்தை 4 கிரகங்கள் சுற்றி வருவதாக கண்டுபிடித்தது. அந்த நட்சத்திரத்திற்கு கெப்ளர் 444 என பெயரிடப்பட்டுள்ளது.

இன்று நடைபெறவுள்ள செய்தியாளர்கள் கூட்டத்தில் புதிய பூமி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.