செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

ஸ்பெயினின் திருமண வயதெல்லை அதிகரித்தது! இனி 16...!

Posted: 2015-07-24 23:43:03
ஸ்பெயினின் திருமண வயதெல்லை அதிகரித்தது! இனி 16...!

ஸ்பெயினின் திருமண வயதெல்லை அதிகரித்தது! இனி 16...!

ஸ்பெயின் நாட்டில் திருமணம் செய்வதற்கான குறைந்தபட்ச வயதெல்லை 14 இலிருந்து 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வயதெல்லை உயர்த்தப்படும் முன்னர் சிறுவர் மற்றும் சிறுமியர் 14 வயதில் நீதிபதி ஒருவரின் அனுமதியோடு திருமணம் முடிக்க முடியும். இதுவே ஐரோப்பாவில் திருமணம் முடிப்பதற்கான குறைந்த பட்ச வயதெல்லையாக இருந்தது.

எனினும் புதிய மாற்றத்தின் மூலம் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் வயதெல்லையுடன் ஸ்பெயின் ஒன்றிப்போயுள்ளது. ஒரு மாதத்திற்கு முன் அனுமதி இன்றி திருமணம் செய்து கொள்வதற்கான குறைந்தபட்ச வயதை ஸ்பெயின் 13 இலிருந்து 16 ஆக உயர்த்தியது. இந்த சட்டமாற்றம் குறித்து ஸ்பெயின் அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே அறிவித்த போதும் தற்போது தொடக்கம் இது அமுலுக்கு வந்துள்ளது.

ஸ்பெயினின் இந்த நடவடிக்கையை ஐ.நாவின் சிறுவர்களுக்கான அமைப்பான யுனிசெப் மற்றும் சிறுவர் உரிமைக்குழுக்கள் வரவேற்றுள்ளன. கடந்த காலங்களில் ஸ்பெயினில் திருமண வயதெல்லை குறைந்திருந்த போதும் 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 16 வயதுக்கு கீழான 365 பேர் மாத்திரமே திருமணம் முடித்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் 2014 ஆம் ஆண்டில் ஐந்து திருமணங்கள் மட்டுமே நடந்திருக்கின்றன. ஆனால், 1980 களில் 12,867 திருமணங்களும் 90 களில் 2678 திருமணங்களும் நடந்திருக்கின்றன. அவற்றுடன் ஒப்பிடும் போது தற்போதய ஆண்டுகளில் வெகுவாக குறைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதொன்றாகும்.