செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

தண்ணீரில் ஓடும் மோட்டார் சைக்கிள் பிரேஸிலில் கண்டுபிடிப்பு! (வீடியோ இணைப்பு)

Posted: 2015-07-26 12:19:09 | Last Updated: 2015-07-26 12:20:14
தண்ணீரில் ஓடும் மோட்டார் சைக்கிள் பிரேஸிலில் கண்டுபிடிப்பு! (வீடியோ இணைப்பு)

தண்ணீரில் ஓடும் மோட்டார் சைக்கிள் பிரேஸிலில் கண்டுபிடிப்பு! (வீடியோ இணைப்பு)

பிரேஸில் நாட்டின் சாவ் பாலோ நகரை சேந்ந்த ரிக்கார்டோ ஆஸேவெடோ என்பவர் தண்ணீரில் ஓடும் மோட்டார் சைக்கிளைக் கண்டுபிடித்துள்ளார்.

அவர் கண்டுபிடித்துள்ள இந்த புதிய மோட்டார் சைக்கிள் ஒரு லீற்றர் தண்ணீரில் சுமார் 500 கிலோமீற்றர் தூரத்துக்கு தங்குதடையின்றி ஓடக் கூடிய ஆற்றல் கொண்டுள்ளது.

டி பவர் எச்20 என பெயரிட்டுள்ள இந்த புதிய மோட்டார் சைக்கிள் சாதாரண தண்ணீரில் ஓடுவதோடு, பெட்ரோல், டீசலில் ஓடும் வாகனங்களைப்போல் நச்சுத்தன்மை கொண்ட காபன் மோனொக்சைட் போன்ற வேதிப் பொருள்களை வெளியேற்றுவதில்லை. மாறாக வெறும் நீராவியை மட்டுமே வெளியேற்றுகின்றது, என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கூறும் ரிக்கேர்டோ இந்த மோட்டார் சைக்கிளில் அமைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான பற்றரியில் இருந்து கொள்கலனில் ஊற்றப்பட்ட தண்ணீரில் பாய்ச்சப்படும் மின்சாரமானது, அந்த தண்ணீரில் உள்ள மூலக்கூறுகளில் பொதிந்திருக்கும் ஹைட்ரஜன் எனப்படும் நீரியத்தின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது.

இதன்மூலம் கிடைக்கும் உந்துசக்தி மூலம் காற்றை கிழித்துக் கொண்டு பறக்கும் இந்த மோட்டார் சைக்கிள் ஒரு லீற்றர் தண்ணீரில் சுமார் 500 கிலோமீற்றர் வரை செல்லும் என்று கூறியுள்ளார்.