செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மட்டக்களப்பில் மொபிடெல் வாடிக்கையாளர் சேவை நிலையம் திறந்துவைப்பு

Posted: 2015-09-04 05:22:11
மட்டக்களப்பில் மொபிடெல் வாடிக்கையாளர் சேவை நிலையம் திறந்துவைப்பு

மட்டக்களப்பில் மொபிடெல் வாடிக்கையாளர் சேவை நிலையம் திறந்துவைப்பு

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கொடு நவீன 4G எல்.ரி.ஈ தொழில் நுட்ப மொபிடெல் வாடிக்கையாளர் சேவை நிலையம் மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தேசிய கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குநர்களான ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் மொபிடல் சேவைகள் நிலையத்தின் தலைவர் பி.ஜி. குமாரசிங்க சிறிசேன, ஆகியோர் நிலையத்தைத் திறந்து வைத்தனர்.

கிழக்குப் பிராந்திய வாடிக்கையாளர்களின் நேரப்பழுவைக் குறைக்கும் நோக்கோடு எந்தவித காகித வேலைகளும் இன்றி வாடிக்கையாளரது கையடக்கத் தொலைபேசி மூலம் சகல விண்ணப்பங்கள், குடுக்கல் வாங்கல்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்நிலையத்தில் பெற முடியும் என மொபிடல் நிறுவகத்தில் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஞ்ஜித் ஜீ. ரூபசிங்க தெரிவித்தார்.

பிரதம நிறைவேற்று அதிகாரி மேலும் தெரிவிக்கையில் -

இலங்கையில் உள்ள 20 மில்லியன் மக்களுக்கு குறித்த சேவைகளை நாடெங்கிலும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவனத்துடன் மொபிடல் இணைந்து சேவைகளை விஸ்தரிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத் தலைவர்களின் ஆசியுரைகளோடு இடம்பெற்ற இந்த நிகழ்வில் மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எஸ். சுதாகரன் முதன் முதலாக வாடிக்கையாளர் சேவையை ஆரம்பித்து வைத்தார்.

ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் வட கிழக்கு பிராந்திய தலைமை அதிகாரி எஸ். கிருபாகரன், மொபிடல் நிறுவனத்தின் சிரேஷ்ட பொது முகாமையாளர் (விற்பனை, அபிவிருத்தி) சந்திக விதாரண, சிரேஷ்ட பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) நவீன் பெரேரா, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார், மட்டக்களப்பு வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.