செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

போதிய சந்தைவாய்ப்பு இல்லாத நிலையில் மட்பாண்டத் தொழில்!

Posted: 2015-09-08 11:55:00
போதிய சந்தைவாய்ப்பு இல்லாத நிலையில் மட்பாண்டத் தொழில்!

போதிய சந்தைவாய்ப்பு இல்லாத நிலையில் மட்பாண்டத் தொழில்!

பிளாஸ்டிக் பொருள்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில் களிமண்ணினால் செய்யப்படும் வீட்டுப் பாவனைப் பொருள்களை சந்தைப்படுத்தமுடியாமல் உள்ளது என உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்தனர்.

அரசின் நல்லாட்சி நிலவும் இந்த நிலையில் இயற்கையாகக் கிடைக்கும் எந்தவித இரசாயனப் பொருள்களும் கலப்பற்ற களிமண், சேம்பு மண் மற்றும் நீரைக் கொண்டு உற்பத்தி செய்யும் சமயலறை உபகரணங்கள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் மற்றும் தயிர்ச் சட்டிகள், சந்தைப்படுத்த சிறு கைத்தொழில் திணைக்களம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

களிமன் ஒரு கரத்தை லோட் ரூபாய் 1500, சேம்பு மன் ஒரு கரத்தை லோட் ரூபாய் 800 மற்றும் செய்யப்பட்ட பச்சையான மட்பாண்டங்களைச் சுடுவதற்காக ஒரு தேங்காய் மட்டை 2 ரூபா செலுத்தி வாங்குவதாகத் தெரிவிக்கின்றனர்.

சுடப்பட்ட ஒரு தயிர்ச்சட்டி 8 ரூபா வீதமும் பாவனைப் பொருட்கள் 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்வதாகத் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரியபோரதீவு, செங்கலடி, ஏறாவூர் மற்றும் வாழைச்சேனை ஆகிய இடங்களில் பாரம்பரிய தொழிலாக இதைச் செய்து வருகின்றனர்.

பெரியபோரதீவு மற்றும் வாழைச்சேனை ஆகிய இடங்களில் மட்பாண்டங்கள் செய்யும் 6 மாதங்கள் கொண்ட தொழில் பயிற்சி ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்படுகின்ற என கிராமிய தொழில் துறைத்திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலக உதவிப் பணிப்பாளர் கே. இளங்குமுதன் தெரிவித்தார்.

பயிற்சியை பூர்த்தி செய்தவர்கள் சுயதொழிலாக தங்களது வீடுகளில் மட்பாண்டங்களை உற்பத்தி செய்து வருவதாகவும் பெரியபோரதீவு நிலையத்தில் தற்போது 5 பேர் பயிற்சி பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உற்பத்தியாளர்களுக்கு உலக தரிசனம் நிறுவனம் சில உதவிகளைச் செய்து வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.