செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

ஹோட்டல் மற்றும் சுற்றுலாத்துறை பயிற்சி நிலையம் திறந்துவைப்பு!

Posted: 2015-09-09 06:07:44
ஹோட்டல் மற்றும் சுற்றுலாத்துறை பயிற்சி நிலையம் திறந்துவைப்பு!

ஹோட்டல் மற்றும் சுற்றுலாத்துறை பயிற்சி நிலையம் திறந்துவைப்பு!

வட மாகாண சுற்றுலாப் பயணிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை நண்பகல் யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள தனியார் இல்லத்தில் விடுதி மற்றும் சுற்றுலாத்துறைக்கான பயிற்சி நிலையம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வட மாகாண சுற்றுலாப் பயணிகள் ஒன்றியத்தின் தலைவர் தி.திலகராஜ் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் கனேடிய நாட்டின் உலக பல்கலைக்கழக அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி எஸ்தர் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தார்கள்.

மங்கள விளக்கினை விருந்தினர்கள் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து கல்லூயின் பெயர்ப் பலகையை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரை நீக்கம் செய்து வைத்ததுதுடன் பாடசாலையை அரசாங்க அதிபரும் உலக பல்கலைக்கழக அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியும் இணைந்து திறந்துவைத்தார்கள்.

இந்த பாடசாலையில் முதற் கட்டமாக சர்வோதயம் மற்றும் உலக பல்கலைக்கழக அமைப்பின் நிதி உதவியுடன் நூறு மாணவ மாணவிகள் இணைக்கப்பட்டு இலவசமான முறையில் பயிற்சிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.