செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

உல்லாசப் பயணிகளைக் கவரும் ஒல்லாந்தர் கால கப்பல் திருத்துமிடம்!

Posted: 2015-09-17 05:33:42
உல்லாசப் பயணிகளைக் கவரும் ஒல்லாந்தர் கால கப்பல் திருத்துமிடம்!

உல்லாசப் பயணிகளைக் கவரும் ஒல்லாந்தர் கால கப்பல் திருத்துமிடம்!

மட்டு. நகரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பல காணப்படினும் மட்டக்களப்பு வாவியில் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டையானது மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் உல்லாசப் பயணிகள் கண்டுகளிக்கின்ற இடமாகவும் இருக்கின்றது. மட்டக்களப்பு கோட்டையானது பாதுகாக்கப்பட்டு ப இலங்கை தொல் பொருள் திணைக்களத்தினால் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றது. மட்டக்களப்பு கோட்டைக்கும், கால நிலை அவதான நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் ஒல்லாந்தர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட கப்பல் திருத்துமிடம் காணப்படுகின்றது. இதில் உள்ள சில பாரிய கற்கள் பொது வாசிகசாலைக்கு எதிரில் அமைந்துள்ள உல்லாச பயணிகளுக்கான தகவல் வழங்கும் மையம் அழகுபடுத்துவதற்காக பாவிக்கப்பட்டுள்ளன. பண்டைய காலங்களில் கப்பல் திருத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் தற்போதும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.