செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

கபாலி படப்பிடிப்பு தொடங்கியது!

Posted: 2015-09-18 02:07:09
கபாலி படப்பிடிப்பு தொடங்கியது!

கபாலி படப்பிடிப்பு தொடங்கியது!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள 'கபாலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது.

'லிங்கா' படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் இந்தப் படத்தை வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். பா.ரஞ்சித் இயக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். நடிகைகள் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கான முதல்கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் (செப்ரெம்பர்) தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சென்னையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் பிரத்தியேக அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்புக்கான பூஜை போடப்பட்டது. இதில், நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். பூஜையைத் தொடர்ந்து படத்தின் முதல் காட்சி படமாக்கப்பட்டது. இதில், ரஜினிகாந்த் பங்கேற்று நடித்தார்.