செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

பாசிக்குடாவில் சர்வதேச சுற்றுலா தினம்!

Posted: 2015-09-27 10:38:14
பாசிக்குடாவில் சர்வதேச சுற்றுலா தினம்!

பாசிக்குடாவில் சர்வதேச சுற்றுலா தினம்!

சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு உலகின் முக்கிய சுற்றுலாத் தலமான பாசிக்குடாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகளவான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பிரயாணிகள் பொழுது போக்குவதற்காக வருகை தந்திருந்தனர்.

பளிங்குபோன்ற சீரையும் அலையற்ற கடலையும் கொண்ட பாசிக்குடாவைப் பார்ப்பதற்காக ஜேர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்தும், இலங்கையின் தென், மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலிருந்தும் அதிகளவான உள்ளூர் உல்லாசப் பயணிகள் படகுச் சவாரியில் ஈடுபட்டுள்ளதைக் காணமுடிந்தது.

இயந்திரப் படகுகளின் அடியில் விசேட கண்ணாடி பொருத்தப்பட்ட படகுகளில் கடலின் நடுப்பகுதிக்குச் சென்று நீரின் அடியில் உள்ள பவளப் பாறைகளை பார்ப்பதில் அதிகளவானோர் ஆர்வம் காட்டினர்.

இத்தகைய பவளப் பாறைகளால் அதிகளவில் பாசிக்குடாவில் காணப்படுவதனால் கடலின் அலை குறைவாக உள்ளதோடு மட்டுமல்லாமல் நீரும் தெளிவாக உள்ளதாக அனுபவமுள்ள படகோட்டிகள் தெரிவித்தனர்.

வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் இத்தகைய பவளப்பாறைகளப் பார்ப்பதற்காகவும், கடல் மண் மற்றும் அலையற்ற கடலில் குளிப்பதற்காகவும் இங்கு வருகின்றனர் அவர்கள் தெரிவித்தனர்.

உள்ளூர் உற்பத்தியாளர்களின் கைப்பணிப்பொருள்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதற்காக மெதடிஸ்த திருச்சபையின் புகலிடம் அமைப்பு பொருள்களை காட்சிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.