செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மன்னாரில் வடமாகாண பாரம்பரிய மாட்டு வண்டி சவாரி

Posted: 2015-10-03 12:59:50
மன்னாரில் வடமாகாண பாரம்பரிய மாட்டு வண்டி சவாரி

மன்னாரில் வடமாகாண பாரம்பரிய மாட்டு வண்டி சவாரி

வடமாகாண பாரம்பரிய மாட்டு வண்டி சவாரி போட்டி இன்று சனிக்கிழமை மன்னார் பரப்பாங்கண்டல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வை கல்வி, விளையாட்டு, கலாசார பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் ரி.குருகுலரசா ஆரம்பித்து வைத்தார்.

கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு துறை அமைச்சும் மாட்டு வண்டிக் கழகமும் மன்னார் மாவட்ட செயலகமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.

கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண கடற்றொழில் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் மாகாண சபை உறுப்பினர்கள், மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்வில் வட மாகாணத்திலிருந்து பல போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

கடந்த காலங்களில் வட மாகாணத்தில் பாரம்பரியமாக பேணப்பட்டு வந்த மாட்டு வண்டி சவாரி போட்டியை தொடர்ந்து பேணும் முகமாகவே இந்தப் போட்டி இடம்பெற்றது.