செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் வெற்றி!

Posted: 2015-10-18 13:33:34
நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் வெற்றி!

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் வெற்றி!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2015-18-ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

வாக்குப் பதிவில் நேரடியாக 1,824 வாக்குகளும், தபால் மூலமாக 783 வாக்குகள் என மொத்தம் 2,607 வாக்குகள் பதிவாகி உள்ளன.

இதையடுத்து, சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிக் பள்ளியில் வாக்குகள் எண்ணும் பணியை தேர்தல் அலுவலர்கள் தொடங்கி உள்ளனர்.

தபால் வாக்குகள் முடிந்து நேரடி வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் 1445 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்து போட்டியிட்ட ராதா ரவி 1138 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார்.