செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

கடதாசியில் உருவான மோட்டார் சைக்கிள்!

Posted: 2015-12-05 10:32:36
கடதாசியில் உருவான மோட்டார் சைக்கிள்!

கடதாசியில் உருவான மோட்டார் சைக்கிள்!

கலை வெளிப்பாடுகளை வெளிக்கொண்டுவர கடதாசி தாள்களை கொண்டு பல விநோத கைப்பணிகளை செய்து வரும் நுவரெலியா கந்தபளை கல்பாலம என்ற பகுதியில் வசிக்கும் சாதாரண விவசாயியான 32 வயதுடைய சந்திக அருண சாந்த என்ற இளைஞர் மக்களை வியக்கவைக்கும் அளவில் பத்தாயிரம் ஏ4 வர்ண கடதாசி தாள்களை கொண்டு அழகான மோட்டார் சைக்கிள் ஒன்றை உருவமைத்துள்ளார்.

சாதாரண குடும்பத்தை சேர்ந்த இவர் விவசாயதுறையில் ஈடுபாடு கொண்டு தனது மனைவி மற்றும் குடும்பத்தாரின் உதவியுடன் இவ்வாறான அற்புதமான வேலைப்பாடுகளை செய்து வருகின்றார்.

இவர் செய்துள்ள கைப்பணி வேலைகளை தினமும் இப்பகுதி மக்கள் பார்வையிடுகின்றனர். அத்துடன் இவற்றை விலை கொடுத்தும் கொள்வனவு செய்கின்றனர்.

இது தொடர்பாக இவரின் திறமை குறித்து விடயமறிந்த செய்தியாளர்கள் இவரின் வீட்டிற்கு, இன்று வியாழக்கிழமை சென்றனர்.

அங்கு இவர் செய்து வைத்திருந்த கைப்பணி வேலைகளை பார்வையிட்டதுடன் இது தொடர்பாக பல கருத்துகள் செய்தியாளர்களால் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த சந்திக அருண சாந்த தெரிவித்ததாவது:-

நான் இவ்வாறான கடதாசி தாள்களை கொண்டு பல உருவங்கள் வடிவமைத்து வருகின்றேன். தன்னிச்சையாகவே குடும்பத்தாருடன் உதவியுடன் செய்து வரும் இவ்வேலைகள் பணத்திற்காக அல்ல. நவீன உலகில் நாமும் ஆக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்கினை கொண்டு இவ்வாறான வேலைப்பாடுகளை செய்து வருகின்றேன்.

பாடசாலை செல்லும் மாணவ மாணவிகள் இவ்வாறாக செய்பாடுகளை செய்து சாதனைகள் படைக்க வேண்டும் என்பதை இங்கு தனது கருத்தில் அவர் வழியுறுத்தினார். தனது சொந்த செலவிலேயே இதுவரை காலமும் கைப்பணி வேலைகளை செய்து வந்தேன். இப்போது செய்திருக்கும் இந்த மோட்டர் சைக்கிளின் உருவுக்காக சுமார் 30 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டுள்ளதோடு, 5 மாதங்களில் இதனை உருவாக்கினேன் என தெரிவித்தார்.

நான் செய்து வரும் இந்த கைப்பணிகளுக்கு பல்வேறுப்பட்ட வரவேற்பும், பாராட்டுகளும், சான்றிதழ்களும் கிடைக்கபெற்றுயிருக்கின்றமை குறிப்பிடதக்கது என அவர் தனது கருத்தில் மேலும் தெரிவித்தார்.