செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

எந்திரன் 2 படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பம்!

Posted: 2015-12-16 03:23:17 | Last Updated: 2015-12-17 00:42:34
எந்திரன் 2 படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பம்!

எந்திரன் 2 படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பம்!

ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன்-2 படப்பிடிப்பு சென்னையில் நேற்று புதன்கிழமை தொடங்கியது.

ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த எந்திரன் திரைப்படம் இந்திய ரசிகர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தேதிகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. தற்போது, கபாலி படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த நிலையில், எந்திரன்-2 கதை விவாதத்தில் இயக்குநர் ஷங்கர் தரப்பு தீவிரமாக ஈடுபட்டு வந்தது. தற்போது, எந்திரன்-2 படப்பிடிப்புத் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தை 'லைக்கா' நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், தைப் பொங்கலுக்கு பிறகு ரஜினிகாந்த் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துக்கு இணையான கதாபாத்திரத்தில் பெலிவூட் நடிகர் அக்‌ஷயகுமார் நடிக்கவுள்ளார். ரஜினிகாந்துக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். படத்திற்கான வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார். நீரவ்ராஷா ஒளிப்பதிவு செய்கிறார். முத்துராஜ் கலை இயக்குநராக ஒப்பந்தமாகியுள்ளார். படத் தொகுப்பாளராக ஆண்டனி பணியாற்றவுள்ளார். ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி பணியாற்றுகிறார்.