செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

பின்னணிப் பாடகி ஷான் மர்மமான முறையில் மரணம்!

Posted: 2016-02-06 09:37:09
பின்னணிப் பாடகி ஷான் மர்மமான முறையில் மரணம்!

பின்னணிப் பாடகி ஷான் மர்மமான முறையில் மரணம்!

கேரள இசையமைப்பாளரின் மகளும், தமிழ் திரைப்பட பின்னணி பாடகியுமான ஷான் சென்னையில் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

கோடம்பாக்கம் சக்கரபாணித் தெருவைச் சேர்ந்த ஷான் ஜான்சன் (29), கேரள இசையமைப்பாளர் ஜான்சனின் மகளான இவர், மேற்கத்திய இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

தமிழில் 'எங்கேயும் எப்போதும்', 'பறவை' உள்ளிட்ட பல படங்களில் பாடல்களையும் ஷான் பாடியுள்ளார்.

கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த அவர், மயிலாப்பூரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் விற்பனைப் பிரிவு மேலாளராகப் பணிபுரிந்தார்.

இவரது வீட்டுக் கதவு வெள்ளிக்கிழமை காலை முதல் திறக்கப்படாமலேயே இருந்தது. நண்பகல் ஷான் ஜான்சன் வீட்டுக்கு வந்த நண்பர்களும், உறவினர்களும் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த அசோக்நகர் பொலீஸார் அங்கு சென்று, விசாரணை நடத்தினர்.