செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

புதிய அரசமைப்பு தொடர்பாக தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்!

Posted: 2016-02-15 05:04:52 | Last Updated: 2016-02-15 12:23:08
புதிய அரசமைப்பு தொடர்பாக தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்!

புதிய அரசமைப்பு தொடர்பாக தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்!

புதிய அரசியல் சீர்திருத்த யாப்பு சம்பந்தமாக ஆலோசனை கூறுதலும் மற்றும் தெளிவுபடுத்துதல் சம்பந்தமான கலந்துரையாடல் மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் 19 ஆவது அரசமைப்பிற்கான திருத்தங்களோடு மேம்படுத்தப்பட்ட பிரஜைகள் சுதந்திரம் எனும் தலைப்பினாலான கைநூலும் மற்றும் அரசியலமைப்பு மாற்றத்திற்கான பிரஜைகளின் முயற்சி அமைப்பினால் புதிய அரசியலமைப்பு ஏன் எமக்கு அவசியம் எனும் தலைப்பில் இரு கைநூல்கள் கலந்து கொண்டோருக்கு வழங்கப்பட்டன.

அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் மற்றும் எகட் நிறுவனம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்நத இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள நிறுவனங்களின் ஊடாக அங்கத்தினர்கள் பங்கேற்றனர்.

வளவாளர்களாக சட்டம் மற்றும் நம்பிக்கை அமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணி கே. ஐங்கரன், இணையத்தின் இலகுபடுத்துனர் எஸ். சொர்ணலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு தெளிவுபடுத்தினர்.