செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

தலைவா உங்கள் ரசிகன் நான்! ரஜினி குறித்து ஷாருக்கான்!

Posted: 2016-02-24 10:10:34
தலைவா உங்கள் ரசிகன் நான்! ரஜினி குறித்து ஷாருக்கான்!

தலைவா உங்கள் ரசிகன் நான்! ரஜினி குறித்து ஷாருக்கான்!

ஷாருக் கான் நடித்துள்ள ஃபேன் படத்தின் Fan Anthem என்கிற பாடல் தற்போது பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

ரசிகர் ஒருவர் தனக்குப் பிடித்த நடிகரை எண்ணிப் பாடுவது போல இந்தப் பாடல் அமைந்துள்ளது. தமிழ், பெங்காலி, போஜ்புரி, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்ப் பாடலுக்கான இணைப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தபோது ரஜினியைக் குறிப்பிட்டு டுவீட் செய்தார் ஷாருக்கான்.

ரஜினி சார், நான் ஒரு சினிமா நட்சத்திரம் அல்ல. உங்களின் எண்ணிலடங்கா ரசிகர்களில் ஒருவன். தலைவா... உங்களுடைய ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார்.

ஃபேன் திரைப்படம் ஏப்ரல் 15ஆம் தேதி வெளியாக உள்ளது.