செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

ஒஸ்கர் விருதுகள் அறிவிப்பு: லியானாடோ டிக்கார்பியோவுக்கு சிறந்த நடிகருக்கான விருது!

Posted: 2016-02-29 06:36:16 | Last Updated: 2016-02-29 06:53:03
ஒஸ்கர் விருதுகள் அறிவிப்பு: லியானாடோ டிக்கார்பியோவுக்கு  சிறந்த நடிகருக்கான விருது!

ஒஸ்கர் விருதுகள் அறிவிப்பு: லியானாடோ டிக்கார்பியோவுக்கு சிறந்த நடிகருக்கான விருது!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் ஒஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்க வந்துள்ள ஹொலிவூட் நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.. ஹொலிவூட் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சிறந்த திரைக்கதைக்கான விருதை 'ஸ்பொட் லைட்' படம் வென்றது. சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை 'தி பிக் ஷொட்' திரைப்படம் வென்றது. எழுத்தாளர்கள் சார்லஸ் மற்றும் ஆடம் ஆகியோர் விருதைப் பெற்றனர்.

சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை அலிக்கா லிக்கேண்டர் வென்றார்.

சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஒஸ்கர் விருதை ஜெனி பேவன் வென்றார். சிறந்த ஒப்பனைக்கான ஓஸ்கர் விருதை மேட் மேக்ஸ் திரைப்படம் வென்றது. சிறந்த ஒளிப்பதிவுக்கான ஓஸ்கர் விருதை தி ரெவனன்ட் திரைப்படம் வென்றது. விருதை ஒளிப்பதிவாளர் இம்மானுவேல் ருபேஸ்க்கி பெற்றுக் கொண்டார். சிறந்த படத்தொகுப்புக்கான ஓஸ்கர் விருதை மேட் மேக்ஸ் ப்யூரி ரோட் திரைப்படம் தட்டிச் சென்றது. சிறந்த ஒலிப்பதிவுக்கான ஓஸ்கர் விருதை மேட் மேக்ஸ் ப்யூரி ரோட் திரைப்படம் வென்றது.

விருதை மாரக் மாங்கினி, டேவிட் ஒயிட் இருவரும் பெற்றுக் கொண்டனர். சிறந்த ஒலிக்கலவைக்கான ஒஸ்கர் விருதை மேட் மேக்ஸ் ப்யூரி ரோட் திரைப்படம் தட்டிச் சென்றது. சிறந்த விஸ்ஷுவல் எஃபக்ட்ஸ்க்கான விருது எக்ஸ் மெஷினா படத்துக்கு கிடைத்துள்ளது. சிறந் அனிமேஷன் குறும்படத்துக்கான விருதை பியர் ஸ்டோரி திரைப்படம் பெற்றது. சிறந் அனிமேஷனுக்கான ஆஸ்கர் விருதை இன்சைட் அவுட் படத்துக்கு கிடைத்துள்ளது.

சிறந்த திரைப்படம் :

சிறந்த திரைப்படத்திற்கான ஒஸ்கர் விருதை ஸ்பாட் லைட் திரைப்படம் தட்டி சென்றது.

சிறந்த நடிகர்:

சிறந்த நடிகருக்கான ஒஸ்கர் விருதை லியானாடோ டிக்கார்பியோ பெற்றார். தி ரெவனன்ட் படத்தில் நடித்ததற்காக விருதை பெற்றார் லியானாடோ டிக்கார்பியோ.

சிறந்த நடிகை:

சிறந்த நடிகைக்கான ஒஸ்கர் விருதை 'ரூம்' படத்தில் நடித்த பிரி லார்சன் பெற்றார்.

சிறந்த இயக்குநர்:

சிறந்த இயக்குநர் விருதை 'ரெவனன்ட்' இயக்குநர் அலெஜான்ட்ரோ பெற்றார்.

சிறந்த பாடல்:

சிறந்த பாடலுக்கான ஒஸ்கர் விருதை 'ஸ்பெக்டர்' திரைப்பட பாடல் பெற்றது.

சிறந்த இசை:

சிறந்த இசைக்கான ஒஸ்கர் விருதை 'தி ஹேட்ஃபுல் எய்ட்' படம் தட்டிச் சென்றது. விருதை இசையமைப்பாளர் எனியோ மோரிகோன் பெற்றுக் கொண்டார்.

சிறந்த வெளிநாட்டு திரைப்படம்:

சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை சன் ஆஃப் சாவ்ல் பெற்றது. ஹங்கேரி நாட்டு திரைப்படமான சன் ஆஃப் சாவ்ல் ஆஸ்கர் விருதை வென்றது.

சிறந்த ஆவணக் குறும்படம்:

சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருது 'ஏ கோல் இன் தி ரிவர்' தட்டிசென்றது.

சிறந்த துணை நடிகர்:

சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை மார்க் ரைலன்ஸ் பெற்றார். பிரிட்ஜ் ஆப் ஸ்பைஸ் படத்தில் நடித்ததற்காக மார்க் ரைலன்ஸ் பெற்றுகொண்டார்.