செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

விஜய், சூர்யா, மணிரத்னம் படங்களுக்கு பாடல்கள் எழுதும் வைரமுத்து!

Posted: 2016-03-04 02:07:34
விஜய், சூர்யா, மணிரத்னம் படங்களுக்கு பாடல்கள் எழுதும் வைரமுத்து!

விஜய், சூர்யா, மணிரத்னம் படங்களுக்கு பாடல்கள் எழுதும் வைரமுத்து!

இந்த ஆண்டு அதிகமான நேரத்தைத் திரைப் பாடல்களுக்குச் செலவிட முடிவு செய்துள்ளார் கவிஞர் வைரமுத்து. பிரபல கதாநாயகர்களின் படங்களுக்குப் பாடல்கள் எழுதி வருகிறார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஒரு படப்பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

புகழ் மிக்க விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க பரதன் இயக்க விஜய் நடிக்கும் அவரது அறுபதாவது படத்துக்கு எல்லாப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதுகிறார். இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

மணிரத்னம் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க கார்த்தி – சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தில் ஏழு பாடல்கள் எழுதுகிறார்.

லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் பிரமாண்டமான படத்தில் எட்டுப் பாடல்கள் எழுதுகிறார்.

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா – சமந்தா நடிக்கும் 24 படத்துக்கும் கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதியிருக்கிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி – தமன்னா நடிக்கும் தர்மதுரை படத்தில் எல்லாப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

விஷால் – ஸ்ரீதிவ்யா நடிக்க முத்தையா இயக்கும் மருது படத்தில் இமான் இசையில் கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதி வருகிறார்.

ஜி.என்.ஆர் குமரவேல் இயக்கத்தில் விக்ரம்பிரபு – ரன்யா ராவ் நடிக்க, இமான் இசையமைக்கும் வாகா படத்தில் இதயத்தை உருக்கும் காதல் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி – மஞ்சிமா மோகன் ஜோடி சேரும் புதிய படத்தின் எல்லாப் பாடல்களையும் இமான் இசையில் எழுதுகிறார்.