செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

வவுனியா வீரபுரம் மணிவாசர் மகாவித்தியாலயத்தின் நவீன முயற்சி

Posted: 2016-03-05 11:22:19
வவுனியா வீரபுரம் மணிவாசர் மகாவித்தியாலயத்தின் நவீன முயற்சி

வவுனியா வீரபுரம் மணிவாசர் மகாவித்தியாலயத்தின் நவீன முயற்சி

வவுனியா வீரபுரம் மணிவாசகர் மகாவித்தியாலயம் பாடசாலை நேர முகாமைத்துவத்தை சிறப்பாகக் பேணுவதற்கு கணனி மயப்படுத்தப்பட்ட தன்னியக்க ஒலி சமிக்கை (Automatic School Bell System) உருவாக்கியுள்ளார்கள்.

கிராமப்புறப் பாடசாலை என்றால் தண்டவாள இரும்புத் தூணில் மணி அடித்து நேர ஒழுங்கை பேணும் நிலையை மாற்றி கணனி மயப்படுத்தப்பட்ட தன்னியக்க ஒலி சமிக்கையை உருவாக்கி புத்தாக்கமும், புரட்சியுமான ஒரு முற்போக்கான செயலை வ/வீரபுரம் மணிவாசகர் மகாவித்தியாலயம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்த ஒலி சமிக்ஞையானது பாடசாலை ஆரம்பம் முதல் பாடசாலை நிறைவு வரை நிகழும் பாடவேளை ஒழுங்குகளையும், ஏனைய விடயங்களையும் கணனி மயப்படுத்தப்பட்ட தன்னியக்க ஒலி சமிக்கை முலம் மூன்று மொழிகளிலும் கூறப்படுகிறது. விசேட செயற்பாடு, ஒன்று கூடலின் போது பாடசாலை நிர்வாகம் விரும்பிய வண்ணம் இதனை மாற்றி அமைக்க கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நவீனத்துவ முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை அதிபர் திரு.க.நித்தியானந்தம் அந்தத் தொழில்நுட்பத்தை வடிவமைத்த ஆசிரியர் திரு சி.செந்தூரன் அவர்களின் தொழில் நுட்ப ஆற்றலும் ஆர்வமும் இணைந்து நிற்கின்றன.

இச் செயற்பாட்டிற்கு அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் வழங்கிய ஒத்துழைப்பு நினைவு கூறப்படவேண்டிய ஒன்றாகும். மேலும் இவ்வாறான எம்வர்களின் கண்டுபிடிப்புக்கள் பாராட்டப்பட வேண்டியதும் வெளிக்கொண்டுவருவதும் அவசியமாகும்.