செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

சைவ மகாசபையின் இளைஞர் மாநாடு வவுனியாவில் ஆரம்பம்! இலங்கை, இந்திய பிரதிநிதிகள் பங்கேற்பு!!

Posted: 2016-03-06 10:56:29 | Last Updated: 2016-03-06 10:59:41
சைவ மகாசபையின் இளைஞர் மாநாடு வவுனியாவில் ஆரம்பம்! இலங்கை, இந்திய பிரதிநிதிகள் பங்கேற்பு!!

சைவ மகாசபையின் இளைஞர் மாநாடு வவுனியாவில் ஆரம்பம்! இலங்கை, இந்திய பிரதிநிதிகள் பங்கேற்பு!!

அகில இலங்கை சைவ மகா சபை சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்த சைவத்தமிழ் இளைஞர் மாநாடு இன்று 6 ஆம் திகதி வவுனியா கோயிற்குளம் சிவன் கோயிலின் சிவன் முதியோர் இல்ல மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

மாநாட்டுக்கு முன்னதாக, வவுனியா குருமன்காடு சிவன் - வைரவர் ஆலயத்தில் இருந்து கோயிற்குளம் சிவன் கோயில் வரையான சுமார் ஏழு கிலோமீற்றர் தூரம் பாதயாத்திரை இடம்பெற்றது. மாநாட்டுக்கு வருகை தந்தவர்கள் சிவபெருமானின் திருச்சொரூபத்துடன் பாதயாத்திரை மேற்கொண்டனர். தொடர்ந்து திருகோணமலை தென்கயிலை ஆதீன முதல்வர் அகத்தியர் அடிகளார் நந்திக்கொடி ஏற்றியதைத் தொடர்ந்து மாநாடு ஆரம்பமானது. சைவ மகா சபைத் தலைவர் சி.சோதிமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கிலங்கை இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சீ.யோகேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.

மேலும், சின்மயா மிசன் யாழ்ப்பாணம் வதிவிட ஆச்சாரியார் யாக்ரத சைதன்ய சுவாமிகள், யாழ்.அரச அதிபர் நா.வேதநாயகன், கோயில்குளம் சிவன் கோயில் ஆலய தர்மகத்தா நவரட்ணராஜா, சர்வதேச இந்து இளைஞர் சங்க அமைப்பாளர் நா. குமரகுருபரன், ஊவா மாகாண கல்வி மேம்பாட்டு ஒன்றியத் தலைவர் க.யோகேஸ்வரன், உளநல மருத்துவர் சிவதாசன், இந்தியா உசண்டகிரி நாகநாத சுவாமியின் சீடர் வடகம்பட்டி ரவி சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

காலை, மாலை என இரு அமர்வுகளாக இன்றைய மாநாட்டில் ஆலயம் சமூக மையம் என்ற தொனிப்பொருளில் குடிகளைத் தழுவிய கோயில்கள் கோயில்களைத் தழுவிய குடிகள், இளைஞர்களும் அறநெறிக் கல்வியும், இளைஞர்களின் ஒழுக்கவியல், வாழ்வாதாரமும் அறக்கொடையும், சைவ சமயத்தின் மேம்பாடு, முன்பள்ளிக் கல்வி உள்ளிட்ட பல விடயதானங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.

இந்த மாநாட்டின்போது சைவ மகா சபையின் பக்தி கீதங்கள் அடங்கிய இறுவெட்டும் வெளியிடப்பட்டது. யாழ்.அரச அதிபர் இதனை வெளியிட்டு வைக்க நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் பெற்றுக்கொண்டார். மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வுகள் நாளை இடம்பெறும்.