செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

இலங்கை இளைஞர் கிரிக்கெட் அணிக்கு முகாமையாளராக தர்மகுலசிங்கம்

Posted: 2016-03-09 03:05:57
இலங்கை இளைஞர் கிரிக்கெட் அணிக்கு முகாமையாளராக தர்மகுலசிங்கம்

இலங்கை இளைஞர் கிரிக்கெட் அணிக்கு முகாமையாளராக தர்மகுலசிங்கம்

கொழும்பு தவிர்ந்த பிறமாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை கிரிக்கெட் வீரர்களை ஊக்குவித்து தேசிய அணியில் இடம்பெறச் செய்வதற்காக பிறமாவட்ட இளைஞர்களையும் பாடசாலை வீரர்களையும் கொண்ட தேசிய இளம் அணி ஒன்று தயாராகியுள்ளது.

இந்த அணியை 'ஶ்ரீலங்கா கிரிக்கெட்' அமைப்பு பத்துநாள் கிரிக்கெட் சுற்றுலாவுக்காக மலேசியாவுக்கு அனுப்பி வைக்கின்றது.

இன்று வியாழக்கிழமை 10ஆம் திகதி கொழும்பிலிருந்து கோலாலம்பூர் புறப்படும் இந்த அணியை யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் திரு.கே.தர்மகுலசிங்கம் அணி முகாமையாளராக வழிநடத்துகின்றார்.

'சிறு மாவட்ட அழைப்பு இளைஞர் அணி' ( மைனர் டிஸ்ட்ரிக்ட் இன்விட்டேஷன் யூத் டீம் ) என்ற பெயரில் மலேசியா செல்லும் அணியில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலையகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று தமிழ் வீரர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் அநுராதபுரம், புத்தளம், மாத்தளை, மாத்தறை, மொனராகலை, கேகாலை, பொலன்னறுவை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வீரர்களும் இவ்வணியில் இடம்பெறுகின்றனர்.

மலேசிய தேசிய அணிக்கு எதிராக 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் 2 இருபது - 20 கிரிக்கெட் போட்டிகளிலும் சிறு மாவட்ட இளைஞர் அணி விளையாடவுள்ளது. இப் போட்டிகள் யாவும் கோலாம்பூர் கின்ராரா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

இந்த வீரர்களில் மூவரைத் தவிர மற்றைய அனைவரும் 19 வயதுக்குட்பட்டவர்களாவர்.

சிறு மாவட்ட இளையோர் அணியில் இடம்பெறும் வீரர்களின் விவரம் கற்ற, கற்றுக் கொண்டிருக்கும் பாடசாலைகளுடன் வருமாறு :

ரிஷாந்த் டியூட்டர் ( யாழ்.புனித பத்திரிசியார் ), சந்தீப்ப நிசன்சல ( அநுராதபுரம் மத்திய கல்லூரி ), சச்சித் இந்த்ரரட்ன ( அநுராதபுரம் மத்திய கல்லூரி ) கஜித் கொட்டுவேகொட ( கேகாலை புனித மரியாள் ), ரமேஷ் நிமன்த ( மாத்தறை புனித சர்வேஷஸ் ), நிவன்த கவேஷ்வர ( மாத்தறை ), பண்டுல உடுபிஹில்ல ( மாத்தளை புனித தோமஸ் ), ஜெயசூரியம் சஞ்சீவ் ( மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரி ), உடித் மதுஷான் ( ஹம்பாந்தோட்டை தெபரவெவ ம.வி ), ஐ.எம்.ஆர்.பி.இலங்கசிங்க ( அநுராதபுரம் புனித பெனடிக்ட் ), டில்ஷான் சந்தருவன் ( மாத்தறை ராஹுல ), எஸ்.அத்தநாயக்க (மொனராகலை றோயல் ), டி.வி.ஜி.சானுக்க ( பொமடுல்ல ), செல்வகதிர் கோபிநாத் ( பதுளை சரஸ்வதி ), நிப்புன் சத்துரங்க ( பொலன்னறுவை றோயல் ), அபிஷ்க பெர்னாண்டோ ( வென்னப்புவை புனித ஜோசப் வாஸ் ).