செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

உலகின் மிகப் பெரிய கப்பல் வெள்ளோட்டத்துக்கு தயார்!

Posted: 2016-03-11 10:39:52 | Last Updated: 2016-03-11 10:40:16
உலகின் மிகப் பெரிய கப்பல் வெள்ளோட்டத்துக்கு தயார்!

உலகின் மிகப் பெரிய கப்பல் வெள்ளோட்டத்துக்கு தயார்!

உலகின் மிகப்பெரிய கப்பலான 'ஹார்மெனி ஒவ் த சீஸ்' (Harmony of the Seas) தனது முதல் பயணத்தை பிரான்ஸின் சென்.நாசியர் துறைமுகத்தில் இருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகின்றது.

80 கோடி ஸ்ரெலிங் பவுண்ஸ் - இலங்கை மதிப்பில் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபா செலவில் கட்டப்பட்ட இந்தக் கப்பலின் நிறை 2 இலட்சத்து 27 ஆயிரம் தொன் ஆகும்.

ஆயிரத்து 187 அடி நீளமும் 216 அடி அகலமும் 210 அடி உயரமும் கொண்ட இந்தக் கப்பலில் 18 தளங்கள் அமைந்துள்ளன. இதில் 6 ஆயிரம் பயணிகள் பயணிக்க முடியும்.

இந்தக் கப்பலில் விளையாட்டு மைதானம், நீச்சல் தடாகம், தியேட்டர், உடற்பயிற்சிக் கூடம், மதுநிலையம், ஹோட்டல் எனப் பல வசதிகள் உள்ளன.

'றோயல் கரீபியன் இன்ரர்நஷனல்' நிறுவனத்துக்கு சொந்தமான இந்தக் கப்பலின் கட்டுமானப் பணிகள் கடந்த 2013 ஆம் ஆண்டு தொடங்கி அண்மையில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.