செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் மகளிர்தின விழா

Posted: 2016-03-12 03:16:34
யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் மகளிர்தின   விழா

யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் மகளிர்தின விழா

யாழ். சமூக செயற்பாட்டு மையம் நடத்திய மகளிர்தின விழா நேற்று வெள்ளிக்கிழமை நல்லூர் சங்கிலியன் பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.

பெண்களின் உரிமையை அங்கீகரிப்பதன் ஊடாக சம உரிமையைப் பேணுவோம் என்ற தொனிப்பொருளில் சமூக செயற்பாட்டு மையத்தின் இணைப்பாளர் ந.சுகிர்தராஜ் தலைமையில் நடத்தப்பட்ட இந்தநிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதர் ஆறுமுகம் நடராஜனும், சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலைக்கழக மனிதவள முகாமைத்துவத் துறைத் தலைவர் தேவரஞ்சினி சிவாஸ்கரனும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சமூகத்தில் முன்னிலை பெற்ற பெண்கள் சாதனைப் பெண்களாக அடையாளப்படுத்தப்பட்டுக் கௌரவிக்கப்பட்டனர். உயர்தரப் பரீட்சையில் உயர் பெறுபேறு பெற்றோருள் இருந்து முச்சக்கரவண்டி ஓட்டுநர் வரை இவர்கள் அடங்குவர். பெண் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்வதற்கான கண்காட்சிக் கூடமும் நிகழ்வில் அமைக்கப்பட்டிருந்தது.

சிறப்பு நிகழ்வாக இன்றைய தமிழ்ச் சமூகத்தில் பெண்களுக்கான மதிப்புணர்வு போதுமானது, போதுமானதல்ல என்ற தலைப்பில் பட்டிமண்டபம் இடம்பெற்றது. செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் இடம்பெற்ற இப்பட்டிமண்டப நிகழ்வில் போதுமானது என்ற அணியில் ஜீவா சஜீவன், ப.கதிர்தர்சினி ஆகியோரும் போதுமானதல்ல என்ற என்ற அணியில் ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ, தி.சுகிர்தா ஆகியோரும் பங்கு பற்றினர்.