செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

வீட்டின் மீது விழுந்த லொறி!

Posted: 2016-03-16 04:18:39
வீட்டின் மீது விழுந்த லொறி!

வீட்டின் மீது விழுந்த லொறி!

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்ட குடியிருப்புக்கு சொந்தமான ஒரு வீட்டின் மீது லொறி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து அட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் லோகி தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குள்ளான லொறி வீதியில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதன் பின் அதன் சாரதி அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் திரும்பி வருவதற்கு முன்னர் வாகனத்தின் நடத்துநர் வாகனத்தை செலுத்த முற்படுகையில் இந்தவிபத்து இடம்பெற்றுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தினால் குறித்த வீடு முற்றாக சேதமாகியுள்ளது. எனினும் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.