செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

கெய்லின் அதிரடி ஆட்டத்தினால் வெற்றி பெற்றது மேற்கிந்தியத் தீவுகள்!

Posted: 2016-03-17 06:46:12 | Last Updated: 2016-03-17 12:19:22
கெய்லின் அதிரடி ஆட்டத்தினால் வெற்றி பெற்றது மேற்கிந்தியத் தீவுகள்!

கெய்லின் அதிரடி ஆட்டத்தினால் வெற்றி பெற்றது மேற்கிந்தியத் தீவுகள்!

ருவென்டி 20 உலகக் கிண்ண சுப்பர் 10 சுற்றில் இங்கிலாந்துடனான ஆட்டத்தில் கிறிஸ் கெயில் சதமடிக்க, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெற்றது.

இந்த இரு அணிகள் மோதிய ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதையடுத்து இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடியது. அந்த அணியில் ஜோ ரூட் அதிகபட்சமாக 48 ஓட்டங்களைப்பெற்றார். ஜேசன் ராய் 15 ஓட்டங்களிலும் அலெக்ஸ் ஹேல்ஸ் 28 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். ஜோஸ் பட்லர் 30, பென் ஸ்டோக்ஸ் 15, மொயின் அலி 7 ஓட்டங்களை எடுத்தனர்.

இறுதியாக, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ஓட்டங்கள் எடுத்தது இங்கிலாந்து. இயான் மோர்கன் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களை எடுத்தார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில், ஆண்ட்ரு ரஸல், டுவைன் பிராவோ தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சுலைமான் பென் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து 183 ரன்கள் இலக்குடன் களமிங்கியது மேற்கிந்தியத் தீவுகள். தொடக்க ஆட்டக்காரர் சார்லஸ் டக் அவுட்டாக, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கெயில் அதிரடியாக ஆடத் தொடங்கினார். மறுமுனையில் சாமுவேல்ஸ் 37 ஓட்டங்கள் எடுத்தார். ராம்தின் 12, பிராவோ 2 ஓட்டங்கள் எடுத்தனர். ரஸல் ஆட்டமிழக்காமல் 16 ஓட்டங்களைப் பெற்றார். இறுதிவரை நின்ற கெயில் அணியை வெற்றிப் பாதையில் வழிநடத்தினார். மொத்தம் 48 பந்துகளில் அவர் 100 ஓட்டங்களை விளாசினார். இதில் 11 சிக்ஸர்களும், 5 பௌண்டரிகளும் அடங்கும்.

இறுதியில் 18.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்களை எடுத்து வெற்றிபெற்றது மேற்கிந்தியத் தீவுகள். இங்கிலாந்தின் டேவிட் வில்லே, டோப்ளே, ரஷீத், மொயின் அலி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

கெயில் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.