செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

6 விக்கெட்டுக்களால் ஆப்கானை வென்றது இலங்கை!

Posted: 2016-03-17 14:10:09
6 விக்கெட்டுக்களால் ஆப்கானை வென்றது இலங்கை!

6 விக்கெட்டுக்களால் ஆப்கானை வென்றது இலங்கை!

ருவென்ரி 20 உலகக் கிண்ணப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. அந்த அணி வீரர் டில்ஷான் ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்களைப் பெற்றார்.

இரு அணிகளுக்கும் இடையேயான ஆட்டம் கொல்கத்தாவில் இன்று வியாழக்கழிமைநடைபெற்றது. இதில் நாணயச் சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது ஷெஸாதும், நூர் அலி ஸர்தானும் களமிறங்கினர். இதில் 12 பந்துகளுக்கு 8 ஓட்டங்களை எடுத்திருந்த ஷெஸாத் மத்யூஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து அஸ்கர் ஸ்டானிக்ஸாய் களமிறங்க, மறுமுனையில் 20 ஓட்டங்களுடன் நின்றிருந்த நூர் அலியை ரங்கன ஹேரத் பவிலியனுக்கு அனுப்பினார். அஸ்கர் நிலைத்து ஆடி வந்த நிலையில், நூர் அலியைத் தொடர்ந்து வந்த கரீம் சாதிக் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து வந்த முகமது நபி 3 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அஸ்கர் நிலைத்து ஆடி அரை சதம் கடந்தார். அடுத்து வந்த சமியுல்லா ஷென்வாரி அஸ்கருடன் சேர்ந்து 31 ஓட்டங்கள் எடுத்தார்.

20 ஒவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை எடுத்தது. இலங்கை சார்பில் பெரேரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய இலங்கை அணிக்கு டில்ஷானும், சந்திமலும் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 41 ஓட்டங்களைக் குவித்தது. சந்திமல் 18 ஓட்டங்களைப் பெற்று வெளியேற அடுத்து வந்த திரிமன்னே 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், டில்ஷான் அடித்து ஆடி ஓட்டங்களைக் குவித்தார். அவருக்கு உறுதுணையாக மத்யூஸ் கடைசி வரை களத்தின் நின்றார்.

ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிறப்பாக பந்து வீசினாலும், களத்தடுப்பு மோசமாக இருந்தது. கைக்கு நேராக வந்த பல பந்துகள் மோசமான களத்தடுப்புக் காரணமாக பௌண்டரிக்குச் சென்றன.

இறுதியில் இலங்கை அணி 18.5 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

ஆட்டநாயகனாக டில்ஷான் தெரிவானார்.