செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

பேராசிரியர் சிற்றம்பலத்தின் 'தடம் பதித்த தமிழ்த் தேசியம்' நூல் அறிமுக விழா!

Posted: 2016-03-18 03:41:41
பேராசிரியர் சிற்றம்பலத்தின் 'தடம் பதித்த தமிழ்த் தேசியம்' நூல் அறிமுக விழா!

பேராசிரியர் சிற்றம்பலத்தின் 'தடம் பதித்த தமிழ்த் தேசியம்' நூல் அறிமுக விழா!

பேராசிரியர் சி.க.சிற்றம்பலத்தின் "தடம் பதித்த தமிழ்த் தேசியம்' என்னும் நூலின் அறிமுகவிழா வவுனியா நகரசபை மண்டபத்தில் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வவுனியா தமிழ்ச்சங்கத்தின் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து தமிழ் வாழ்த்தை திருமதி பராசக்தி ஜெகநாதன் பாட, தொடக்கவுரையை தமிழ்மணி கே.கே.அருந்தவராஜா (மேழிக்குமரன்) நிகழ்த்துவார்.

தலைமையுரையை அடுத்து நூல் அறிமுகத்தை தமிழருவி த.சிவகுமாரன் வழங்குவார். சிறப்புப் பிரதிகள் வழங்கலைத் தொடர்ந்து ஆய்வுரையை யாழ். பல்கலைக்கழக அரச அறிவியல்துறைத் தலைவர் கலாநிதி கே.பி.கணேசலிங்கம் நிகழ்த்த, ஏற்புரையை நூலாசிரியர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் வழங்குவார்.

நன்றியுரையை யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட உதவிப் பதிவாளர் மு.நந்தகுமார் நிகழ்த்துவார்.