செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

ஈடன்கார்டனில் நம்பிக்கை தகர்ந்தது! பாகிஸ்தானை வென்றது இந்தியா!!

Posted: 2016-03-19 21:48:55 | Last Updated: 2016-03-19 21:49:19
ஈடன்கார்டனில் நம்பிக்கை தகர்ந்தது! பாகிஸ்தானை வென்றது இந்தியா!!

ஈடன்கார்டனில் நம்பிக்கை தகர்ந்தது! பாகிஸ்தானை வென்றது இந்தியா!!

ருவென்ரி -20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது இந்தியா.

இந்த வெற்றியின் மூலம் ஈடன்காரடன் மைதானத்தில் பாகிஸ்தானை வென்றதில்லை என்ற நம்பிக்கையை மாற்றியது இந்தியா. ஆனால் உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவை வென்றதில்லை என்ற பாகிஸ்தானின் சோகம் தொடர்கிறது.

இந்தியாவின் கொல்கத்தாவில் நேற்று சனிக்கிழமை நடந்த இந்த ஆட்டம் மழையால் ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இதனால் ஆட்டம் 18 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணித் தலைவர் டோனி களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இதையடுத்து அஹமது ஷெஷாட் - ஷர்ஜீல் கான் ஜோடி பாகிஸ்தானின் இனிங்ஸைத் தொடங்கியது. பாகிஸ்தான் 7.4 ஓவர்களில் 38 ஓட்டங்களை எட்டியபோது ஷர்ஜீல் கான் விக்கெட்டை இழந்தது. அவர் 24 பந்துகளில் 17 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பாண்ட்யாவின் அற்புதமான பிடியெடுப்பால் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து அப்ரிடி களமிறங்க, ஷெஷாட் 28 பந்துகளில் 25 ஓட்டங்கள் சேர்த்து வெளியேறினார். இதன்பிறகு உமர் அக்மல் களமிறங்கினார். மறுமுனையில் ஓட்டங்களை சேர்க்க தடுமாறிய அப்ரிடி 14 பந்துகளில் 8 ஓட்டங்கள் சேர்த்து நடையைக் கட்டினார்.

இதையடுத்து உமர் அக்மலுடன் இணைந்தார் சொஹைப் மலிக். அதிரடியாக ஆடிய இந்த ஜோடி 4 ஓவர்களில் 41 ஓட்டங்கள் சேர்த்தது. 16 பந்துகளைச் சந்தித்த உமர் அக்மல் 1 சிக்ஸர், 1 பௌண்டரியுடன் 22 ஓட்டங்கள் சேர்த்து டோனியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து சர்ஃப்ராஸ் அஹமது களமிறங்க, மலிக் சிக்ஸர் விளாச முயன்றபோது அஸ்வினிடம் பிடிகொடுத்து வெளியேறினார். அவர் 16 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பெளண்டரிகளுடன் 26 ஓட்டங்கள் எடுத்தார்.

இறுதியில் 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ஓட்டங்கள் சேர்த்தது பாகிஸ்தான். சர்ஃப்ராஸ் அஹமது 8, முகமது ஹபீஸ் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா தரப்பில் ஆசிஷ் நெஹ்ரா, பூம்ரா, ஜடேஜா, ரெய்னா, பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

பின்னர் ஆடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 10, ஷிகர் தவன் 6, சுரேஷ் ரெய்னா 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதையடுத்து விராட் கோலியுடன் இணைந்தார் யுவராஜ் சிங். இந்த ஜோடி சிறப்பாக ஆட, இந்தியா வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் நிதானம் காட்டிய யுவராஜ் சிங், பின்னர் வேகமாக ஓட்டங்களை சேர்த்தார். அவர் 23 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பௌண்டரியுடன் 24 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் பெள்ண்டரி எல்லையில் சமியிடம் பிடிகொடுத்து 'அவுட்' ஆனார். இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 61 ஓட்டங்கள் சேர்த்தது. இதையடுத்து டோனி களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய கோலி 34 பந்துகளில் அரைச்சதம் தொட்டார்.

இதன்பிறகு கடைசி 3 ஓவர்களில் 13 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. முகமது இர்ஃபான் வீசிய 16-ஆவது ஓவரின் 4-ஆவது பந்தில் சிக்ஸரை விரட்டிய டோனி, அடுத்த பந்தில் ஒரு ஓட்டம் எடுக்க, இந்தியா 15.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 119 ஓட்டங்கள் எடுத்து வெற்றி கண்டது. கோலி 37 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பெளண்டரிகளுடன் 55, டோனி 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.