செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

எந்திரன் 2 படத்துக்கு 330 கோடி ரூபா காப்புறுதி!

Posted: 2016-03-20 11:19:06
எந்திரன் 2 படத்துக்கு 330 கோடி ரூபா காப்புறுதி!

எந்திரன் 2 படத்துக்கு 330 கோடி ரூபா காப்புறுதி!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் 2 திரைப்படம் சுமார் 330 கோடி ரூபாய்க்கு காப்புறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அளவுக்கு இதுவரை எந்தத் திரைப்படமும் இந்தியாவில் காப்புறுதி செய்யப்பட்டதில்லை எனவும் காப்புறுதி வல்லுநர்கள் கூறுகின்றனர்.

எந்திரன் 2 எனப் பெயரிடப்பட்டு சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் இந்தப் படம் தற்போது தயாராகி வருகிறது.

மிகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படும் இந்தப் படம், இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களால் காப்பீடு செய்யப்பட்டுள்ளன.

இந்தியத் திரைபடத்துறையில் அண்மைக் காலமாக பல படங்கள் காப்புறுதி செய்யப்பட்டு வருகின்றன.

படப்படிப்பில் எதிர்பாராத வகையில் ஏற்படும் இடையூறுகள், கலைஞர்களின் உடல்நலக் குறைவால் உருவாகும் தாமதங்களால் ஏற்படும் நஷ்டங்கள், படம் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள நாளில் அசம்பாவிதங்களால் அது தடைபடுதல் போன்ற பல காரணங்களுக்காகவே திரைப்படங்கள் காப்புறுதி செய்யப்படுகின்றன என்று பொதுத்துறை நிறுவனமான யுனைட்டெட் இந்தியா இன்ஷ்யுரன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் மேலான் இயக்குநருமான வி ஜெகன்நாதன் பி.பி.சி தமிழோசைக்குத் தெரிவித்தார்.

எனினும் படப்பிடிப்பு காலத்தில் கலைஞர்களின் உயிரிழப்புக்கு இந்தக் காப்புறுதிகள் பொருந்தாது எனவும் அவர் கூறுகிறார்.