செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

உலகக் கிண்ணத்தின் பின்னர் அப்ரிடியிடம் இருந்து தலைமை பறிக்கப்படும்!

Posted: 2016-03-21 23:12:46 | Last Updated: 2016-03-22 01:00:40
உலகக் கிண்ணத்தின் பின்னர் அப்ரிடியிடம் இருந்து தலைமை பறிக்கப்படும்!

உலகக் கிண்ணத்தின் பின்னர் அப்ரிடியிடம் இருந்து தலைமை பறிக்கப்படும்!

ருவென்ரி -20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு பாகிஸ்தான் ரி-20 அணியின் தலைமைப் பதவியிலிருந்து ஷகீட் அப்ரிடி நீக்கப்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைவர் சஹாரியார் கான் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியிலும் அவருக்கு இடம் கிடையாது என அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

ரி-20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணி, கடந்த 19 ஆம் திகதி கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்றது. இதனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார் அப்ரிடி.

இந்த நிலையில் கொல்கத்தாவில் இருந்து திங்கள்கிழமை லாகூர் வந்த சஹாரியார் கான், செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலகக் கிண்ணப் போட்டியோடு அப்ரிடி ஓய்வு பெறுவார் என்ற புரிதல் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மற்றும் அப்ரிடி இடையே உள்ளது. அப்ரிடி ஏற்கெனவே உலகக் கிண்ணப் போட்டியோடு ஓய்வு பெறவுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை அவர் மனதை மாற்றிக்கொண்டு தொடர்ந்து விளையாட விரும்பினாலும் கூட, அவரை அணியில் நீடிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து ஆராய்வோம்.

கடந்த ஆண்டு பாகிஸ்தான் ரி -20 அணியின் தலைவராக அப்ரிடியை நியமித்ததில் எந்த தவறும் இல்லை. அப்ரிடி பாகிஸ்தானின் புகழ்பெற்ற வீரர். அவர் ஏராளமான போட்டிகளில் தனியாளாக நின்று பாகிஸ்தானுக்கு வெற்றி தேடித் தந்திருக்கிறார். எனவே அவரை தலைவராக நியமித்தது சரியான முடிவே. முக்கியமான போட்டிகளில் பாகிஸ்தான் தோற்கிறபோதெல்லாம் அப்ரிடி மீது விமர்சனக் கணைகள் பாய்வது இயல்பானதுதான். இந்த நேரத்தில் அப்ரிடிக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

இந்தியாவிடம் தோற்றது மிகப்பெரிய ஏமாற்றம்தான். ஆனால் அதன் காரணமாக பாகிஸ்தான் அணியில் எந்த பிளவும் ஏற்படவில்லை. வீரர்கள் அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கிறார்கள். பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு இப்போதும் வாய்ப்பு இருக்கிறது என்றார்.