செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து!

Posted: 2016-03-22 21:40:59 | Last Updated: 2016-03-22 21:42:30
அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து!

அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து!

பாகிஸ்தானை 22 ஓட்டங்களால் தோற்கடித்த நியூசிலாந்து அணி முதல் அணியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

ருவென்ரி -20 உலகக்கிண்ணத் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் மொகாலியில் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதின.

நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது. குப்தில் - வில்லியம்ஸன் இணை அதிரடி தொடக்கம் கொடுத்தது.

7 ஓவர்களில் 62 ஓட்டங்களைப் நியூசிலாந்து பெற்றிருந்த வேளை 17 ஓட்டங்களுடன் வில்லியம்ஸன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த முன்றோ 7 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

33 பந்துகளில் அரைச்சதம் அடித்து அதிரிடி காட்டிய குப்தில் 48 பந்துகளில் 10 பௌண்ட்ரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கலாக 80 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அவரின் ஆட்டமிழப்பின் பின் நியூசிலாந்தின் ஓட்ட எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.

கோரி அண்டர்சன் 21, ரோஞ்சி 11 என ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் நிறைவில் நியூசிலாந்து 5 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ரெய்லர் 36 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணிக்கு ஷர்ஜில் கான் - அஹமது ஷெஷாட் ஜோடி 5 ஓவர்களில் 65 ஓட்டங்களைக் குவித்து அதிரடி காட்டியது. ஷர்ஜில் கான் 25 பந்துகளில் ஒரு சிக்ஸர், 9 பௌண்ட்ரிகளுடன் 47 ஓட்டங்களை சேர்த்து வெளியேற, பின்னர் வந்த லத்தீப் 3 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார்.

இதன்பிறகு அஹமது ஷெஷாட் 30 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, உமர் அக்மலுடன் இணைந்தார் அப்ரிடி. அக்மல் தடுமாறியபோதும், அதிரடியாக ஓட்டங்களை சேர்த்த அப்ரிடி 9 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பௌண்ட்ரிகளுடன் 19 ஓட்டங்கள் சேர்த்து பௌண்ட்ரி எல்லையில் அண்டர்சனிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

உமர் அக்மல் 24 ஓட்டங்களுடன் வெளியேற, பாகிஸ்தானால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.