செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

இதுவல்லவா இலட்சியம்?

Posted: 2016-03-22 22:21:28
இதுவல்லவா இலட்சியம்?

இதுவல்லவா இலட்சியம்?

100 குழந்தைகளைப் பெறுவதே தனது வாழ்வின் இலக்கு என சபதம் மேற்கொண்டிருக்கிறார் பாகிஸ்தானை சேர்ந்த வைத்தியர் ஒருவர்.

பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரைச் சேர்ந்தவர் ஜோன் முஹமட் (வயது 43). வைத்தியரான இவருக்கு 3 மனைவிகள், 21 மகள்கள், 14 மகன்கள் இருக்கின்றனர். அனைவரும் ஒற்றுமையுடன் சந்தோசமாக ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.

கடந்த வாரம் இவரின் இரண்டாவது, மூன்றாவது மனைவிகள் 2 பெண் பிள்ளைகளைப் பிரசவித்தனர். இந்நிலையில் முடிந்தால் 4 ஆவது திருமணம் செய்து 100 குழந்தைகளைப் பெறுவதே தன் வாழ்வின் இலக்கு என ஜோன் முஹமட் கூறியுள்ளார்.

மாதம் ஒரு இலட்சம் ரூபா (பாகிஸ்தான் ரூபா) சம்பாதிக்கும் இவர் இது தனது குடும்பச் செலவுக்குப் போதுமானதாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

கல்வி இன்றி வாழ்க்கை இல்லை என்பதை உறுதியாக நம்பும் அவர், தன்னுடைய மகன்கள் மற்றும் மகள்களுக்கு தரமான கல்வியை வழங்குவது தன் .லட்சியம் என்றும் கூறியுள்ளார். ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பதே பெரும்பாடு என்று புலம்பும் பெற்றோர்களுக்கு ஜான் முகமது சிம்ம சொப்பனம்தான்.