செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

ஆஸ்திரேலியா வெற்றி: அரையிறுதி வாய்ப்பின்றி வெளியேறியது பாகிஸ்தான்!

Posted: 2016-03-25 12:28:36 | Last Updated: 2016-03-25 12:29:54
ஆஸ்திரேலியா வெற்றி: அரையிறுதி வாய்ப்பின்றி வெளியேறியது பாகிஸ்தான்!

ஆஸ்திரேலியா வெற்றி: அரையிறுதி வாய்ப்பின்றி வெளியேறியது பாகிஸ்தான்!

21 ஓட்டங்களால் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

ருவென்ரி -20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் இன்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகள் மோதின.

இதில் நாணயச்சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்கம் கொடுத்த கவாஜா - பின்ஞ் இணை சொதப்பியது. 21 ஓட்டங்களை எடுத்த கவாஜா வெளியேற அடுத்து வந்த வோர்ணர் 9 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

பின்ஞ்சுடன் இணைந்த அணித்தலைவர் ஸ்மித் பொறுப்பாக ஆடினார். இந்நிலையில் பின்ஞ் (15) ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த மக்ஸ்வெல் அடித்தாடினார். ஒரு சிக்ஸர், 3 பௌண்டரிகள் விளாசி 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வட்சன் ஸ்மித்துடன் இணைந்து பாகிஸ்தானின் பந்துகளை துவம்சம் செய்தார். 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்த ஆஸ்திரேலியா 193 ஓட்டங்களைப் பெற்றது.

ஸ்மித் 7 பெளண்டரிகளுடன் 61 ஓட்டங்களையும் வட்சன் 3 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பாகிஸ்தானின் பந்து வீச்சில் வாகாப் ரியாஸ், இமாட் வசீம் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானுக்கு தொடக்கம் கொடுத்த சர்ஜில்கான் - ஷெஷாட் இணை நிலைக்கவில்லை. ஷெஷாட் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய லத்தீவ் பொறுப்பாக ஆடினார்.

இந்நிலையில் சர்ஜில்கான் 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த உமர் அக்மல் 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். லத்தீவ்வும் 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சகீட் அப்ரிடி 14, வசீம் 0, சர்பிரஸ் அஹமட் 2, வாகாப் ரியாஸ் 0, சமி 4 ஓட்டங்களுடன் வெளியேறினர்.

20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்த பாகிஸ்தான் 172 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது. மலிக் ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சில் பல்க்னர் 5 , ஷாம்பா 2 ஹசல்வூட் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக பல்க்னர் தெரிவானார்.