செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

அரையிறுதிக்குள் நுழைந்தது மேற்கிந்தியத்தீவுகள்!

Posted: 2016-03-25 14:20:18
அரையிறுதிக்குள் நுழைந்தது மேற்கிந்தியத்தீவுகள்!

அரையிறுதிக்குள் நுழைந்தது மேற்கிந்தியத்தீவுகள்!

தென்னாபிரிக்க அணியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது மேற்கிந்தியத் தீவுகள் அணி. எனினும் 123 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை 20 ஆவது ஓவரில் 3 விக்கெட்களை இழந்தே பெற்றது.

இந்தியாவில் நடக்கும் ருவென்ரி-20 உலகக்கிண்ண தொடரில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் - தென்னாபிரிக்க அணிகள் மோதின.

நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத்தீவுகள் முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.

துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்காவின் தொடக்க வீரர் ஆம்லா ஒரு ஓட்டத்துடன் ரன் அவுட் ஆனார். பின்னர் வந்த டூ பிளசிஸ் 9, ரோசவ் 0, டி வில்லியர்ஸ் 10, மில்லர் 1 என வேகமாக ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க வீரரான டி கொக் நிதானமாக ஆடி 46 பந்துகளில் 47 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த வைஸ் 28, பங்கிசோ 4 ஓட்டங்களில் ஆட்டடமிழக்க 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்த தென்னாபிரிக்கா 123 ஓட்டங்களை எடுத்தது. இதில் மொறிஸ் 16 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

மேற்கிந்தியத் தீவுகளின் பந்து வீச்சில் ரஸல், கெயில், பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகளின் தொடக்க வீரர்களில் ஒருவரான கெயில் 4 ஓட்டங்களுடன் 'போல்ட்' ஆனார். அடுத்து வந்த பிளட்சர் 11, மற்றொரு தொடக்கவீரரான சார்ள்ஸ் 32, பின்னர் வந்த பிராவோ 8, ரஸல் 4, சமி 0, சாமுவேல்ஸ் 44 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

வெற்றிக்காக கடுமையாகப் போராடிய மேற்கிந்தியத் தீவுகள் 19.4 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

தென்னாபிரிக்காவின் பந்து வீச்சில் தஹீர் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகனாக சாமுவேல்ஸ் தெரிவானார்.