செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து! போராடி வெளியேறியது இலங்கை!!

Posted: 2016-03-26 22:02:48
அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து! போராடி வெளியேறியது இலங்கை!!

அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து! போராடி வெளியேறியது இலங்கை!!

ருவென்ரி-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது இங்கிலாந்து.

இதன்மூலம் 3-ஆவது வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து அணி, 'ஏ' பிரிவில் இருந்து 2-ஆவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. மேற்கிந்தியத் தீவுகள் முதல் அணியாக அரையிறுதியை உறுதி செய்துவிட்டது. இதனால் அந்தப் பிரிவில் இடம்பெற்றிருந்த இலங்கை, தென்னாபிரிக்க அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறின.

டில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் ரன் ஏதுமின்றியும், பின்னர் வந்த ஜோ ரூட் 25 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து ஜோஸ் பட்லர் களமிறங்க, ஜேசன் ராய் 39 பந்துகளில் 42 ஓட்டங்கள் சேர்த்து வெளியேறினார். இதன்பிறகு கப்டன் இயோன் மோர்கன் களமிறங்க, 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 99 ஓட்டங்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து. பெரேரா வீசிய 16-ஆவது ஓவரில் மோர்கன் ஒரு பௌண்டரி, ஒரு சிக்ஸரை விளாச, சானக வீசிய அடுத்த ஓவரில் பட்லர் ஒரு சிக்ஸரையும், ஒரு பௌண்டரியையும் பறக்கவிட்டார்.

தொடர்ந்து வேகமாக ஓட்டங்களை சேர்த்த பட்லர் 28 பந்துகளில் அரைச் சதம் கண்டார். கடைசி ஓவரில் மோர்கன் ஆட்டமிழந்தார். அவர் 22 ஓட்டங்கள் எடுத்தார். பின்னர் வந்த பென் ஸ்டோக்ஸ், கடைசிப் பந்தில் சிக்ஸரை விளாச, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்கள் குவித்தது இங்கிலாந்து.

ஜோஸ் பட்லர் 37 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பெளண்டரிகளுடன் 66, ஸ்டோக்ஸ் 6 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி 5 ஓவர்களில் மட்டும் 72 ஓட்டங்கள் குவித்தது இங்கிலாந்து.

பின்னர் ஆடிய இலங்கை அணியில் டில்ஷான் 2, சந்திமால் 1, சிறிவர்த்தனா 7, திரிமன்னே 3 ஓட்டங்களில் வெளியேற, 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 5-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த மத்தியூஸ் - கப்புகெதர ஜோடியின் அதிரடியால், இலங்கை சரிவிலிருந்து மீண்டது. கப்புகெதர 30 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, திஸர பெரேரா களம்புகுந்தார். அப்போது இலங்கையின் வெற்றிக்கு 7 ஓவர்களில் 77 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது. இதன்பிறகு மத்தியூஸ் 40 பந்துகளில் அரைச் சதம் கண்டார்.

மொயீன் அலி வீசிய 16-ஆவது ஓவரில் மத்தியூஸ் இரு சிக்ஸர்களை விளாச, அந்த ஓவரில் மட்டும் 21 ஓட்டங்கள் கிடைத்தன. இதனால் இங்கிலாந்துக்கு நெருக்கடி ஏற்பட்டது. 17-ஆவது ஓவரில் பெரேரா 20 ஓட்டங்களில் (11 பந்துகளில்) ஆட்டமிழக்க, இலங்கைக்கு சிக்கல் ஏற்பட்டது.

பின்னர் வந்த சானக 15 ஓட்டங்கள், ஹேரத் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் 15 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அந்த ஓவரை பென் ஸ்டோக்ஸ் யோர்க்கராக வீச, மத்தியூஸால் ஓட்டங்களை எடுக்க முடியவில்லை. 4 ஓட்டங்கள் மட்டுமே கிடைத்தன.

இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 161ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. தசைப் பிடிப்போடு போராடிய மத்தியூஸ் 54 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பௌண்டரிகளுடன் 73 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோர்டான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.