செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

கோலியின் அதிரடி ஆட்டத்தினால் ஆஸியை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!

Posted: 2016-03-27 14:15:44 | Last Updated: 2016-03-27 14:20:49
கோலியின் அதிரடி ஆட்டத்தினால் ஆஸியை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!

கோலியின் அதிரடி ஆட்டத்தினால் ஆஸியை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ருவென்டி 20 கிரிக்கெட் போட்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்திய - ஆஸ்திரேலிய அணிகளிக்கிடையிலான போட்டியில் ஆஸ்திரேயாவை வென்று அரையிறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. மொஹாலியில் நடைபெற்ற மிக முக்கியமான ஆட்டம் ஒன்றில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை அடுத்து இந்திய அணி தமது அரையிறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்த்து மும்பையில் விளையாடவுள்ளது.

இந்திய அணியின் விராட் கோலி அதிரடியாக ஆடி 51 பந்துகளில் 82 ஓட்டங்களை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி தமது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ஓட்டங்களை எடுத்தது. ஆஸி அணியின் சார்பில் ஆரோன் ஃபின்ச் அதிகபட்சமாக 43 ஓட்டங்களை எடுத்தார்.

அவரும் துவக்க ஆட்டக்காரரான உமர் கவாஜாவும் ஆஸி அணிக்கு ஓர் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தாலும், அதன் பின்னர் ஆடிய வீரர்கள் அதை முழுமையாக சாதகமாக்கிக்கொள்ள முடியவில்லை.

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெறுமா எனும் கேள்விகளும் எழுந்தன. எனினும் கடைசி நான்கு ஓவர்களில் தோனியும், கோலியும் அதிரடியாக ஆடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

ஆட்டநாயகனாக கோலி தெரிவானார்.

அரையிறுதி ஆட்டங்கள் எதிர்வரும் புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளன.