செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

கின்னஸ் சாதனை படைத்தார் பிரபல பின்னணிப் பாடகி சுசீலா!

Posted: 2016-03-29 13:26:16
கின்னஸ் சாதனை படைத்தார்  பிரபல பின்னணிப் பாடகி சுசீலா!

கின்னஸ் சாதனை படைத்தார் பிரபல பின்னணிப் பாடகி சுசீலா!

அதிக பாடல்கள் பாடியமைக்காக பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலா கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவருடைய சாதனையை கின்னஸ் ஏற்றுக்கொண்டுள்ளது.

பி.சுசீலா இசைத் துறைக்கு வந்து 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். அவரின் இத்தகைய நெடிய இசைப் பயணத்தையும், சாதனையையும் பாராட்டும்விதமாக அவருக்கு இந்தக் கெளரவம் கிடைத்துள்ளது.

அதிகப் பாடல்களைப் பாடியவர் என்கிற அவருடைய சாதனைக்கு கின்னஸ் அங்கீகாரம் அளித்துள்ளது. 1960 முதல் இன்றுவரை பி. சுசீலா 17, 695 பாடல்களைப் பாடியுள்ளார்.