செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

செயற்பாட்டு திறனுடைய இலவச செயற்கைக் கை வழங்கும் செயற்றிட்டம்!

Posted: 2016-03-30 01:46:53
செயற்பாட்டு திறனுடைய இலவச செயற்கைக்   கை வழங்கும் செயற்றிட்டம்!

செயற்பாட்டு திறனுடைய இலவச செயற்கைக் கை வழங்கும் செயற்றிட்டம்!

யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் முழங்கைக்கு கீழ் கைகளை இழந்தவர்களுக்கு யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகத்தின் செயற்பாட்டு திறனுடைய செயற்கைக் கை வழங்கும் திட்டத்தின் இரண்டாவது தொகுதி வழங்கலுக்கான பயனாளிகளின் விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

ஆஸ்திரேலியா றோட்டறிக்கழக உறுப்பினர்களான வைத்திய நிபுணர்களால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி இலங்கைவேந்தன் கலைக் கல்லூரியில் இந்தக் கைகள் பொருத்தப்படவுள்ளன.

முழங்கைக்கு கீழ் ஆகக்குறைந்தது 10 சென்ரிமீற்றர் நீளத்துக்கு கை இருக்க வேண்டும். இவ்வாறு பொருத்தப்படும் கைகள் வினைத்திறனுடன் செயலாற்றக் கூடியன. தமது இயல்பான செயற்பாடுகளை குறித்த கையைப் பயன்படுத்தி செயற்படுத்த முடியும்.

பதிவுகளுக்கு 551A, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ள முடியும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். தொடர்பு - 021-2216222