செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

ருவென்டி 20 உலகக் கிண்ண தர வரிசையில் விராட் கோலி முதலிடம்!

Posted: 2016-03-30 03:03:25
ருவென்டி 20 உலகக் கிண்ண தர  வரிசையில் விராட் கோலி முதலிடம்!

ருவென்டி 20 உலகக் கிண்ண தர வரிசையில் விராட் கோலி முதலிடம்!

ருவென்டி 20 கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ருவென்டி 20 உலகக் கிண்ணப் போட்டியில் அபாரமாக ஆடி வரும் கோலி 4 ஆட்டங்களில் 184 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் தரவரிசையில் ஏற்றம் கண்டுள்ளார்.

முன்னதாக முதலிடத்தில் இருந்த அரோன் பின்ஜை விட 24 புள்ளிகள் பின்தங்கியிருந்த கோலி, இப்போது அவரைவிட 68 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளார். அரோன் பின்ஜ் 2ஆவது இடத்திலும், நியூஸிலாந்தின் மார்ட்டின் குப்தில் 2 இடங்கள் முன்னேறி 3ஆவது இடத்திலும் உள்ளனர். இங்கிலாந்தின் ஜோ ரூட் 38 இடங்கள் முன்னேற்றம் கண்டு 11ஆவது இடத்திலும், மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில் ஓர் இடம் முன்னேறி 6ஆவது இடத்திலும் உள்ளனர். ஆப்கானிஸ்தான் வீரர் முகமது ஷெஸாத் 3 இடங்கள் முன்னேறி 8-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் மேற்கிந்தியத் தீவுகளின் சாமுவேல் பத்ரீ, இந்தியாவின் அஸ்வினை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார். சாமுவேல் பத்ரீ உலகக் கிண்ணப் போட்டியில் இதுவரை 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வின் 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

நியூஸிலாந்தின் ஆடம் மில்னி 6 இடங்கள் முன்னேறி 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய வீரர்களில் ஜடேஜா 3 இடங்கள் முன்னேறி 7ஆவது இடத்தையும், பூம்ரா 13 இடங்கள் முன்னேறி 13ஆவது இடத்தையும், ஆசிஷ் நெஹ்ரா 14 இடங்கள் முன்னேறி 16ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ருவென்டி 20 உலகக் கிண்ணப் போட்டியோடு ஓய்வு பெற்ற ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன், சகலதுறை வீரர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். துடுப்பாட்டத்தரவரிசையில் அவர் 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

அணிகள் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ருவென்டி 20 உலகக் கிண்ணப் போட்டியில் இதுவரை ஓர் ஆட்டத்தில்கூட தோற்காத அணியான நியூஸிலாந்து இரு இடங்கள் முன்னேறி 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் 3 ஆவது இடத்தில் உள்ளது.