செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவானது இங்கிலாந்து!

Posted: 2016-03-30 14:18:50
நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவானது   இங்கிலாந்து!

நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவானது இங்கிலாந்து!

ருவென்டி 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது. டில்லியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இப்போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ஓட்டங்களைப் பெற்றது. அணியின் சார்பாக அதிகபட்சமாக கொலின் மன்றோ அதிகபட்சமாக 46 ஓட்டங்களை எடுத்தார்.

அணியின் அதிரடி ஆட்டக்காரர் மார்டின் குப்தில் 15 ஓட்டங்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். முதல் 15 ஓவர்களில் சீராக ஓட்டங்களை குவித்த நியூசிலாந்து அணியினர் கடைசி ஐந்து ஓவர்களில் பெரிய அளவுக்கு ஓட்டங்களை எடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் சிறப்பாக ஆடி 44 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 78 ஓட்டங்களை எடுத்து இங்கிலாந்து அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்.

நாளை வியாழக்கிழமை இந்திய - மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இடையே நடைபெறும் அணி இங்கிலாந்து அணியுடன் இறுதி ஆட்டத்தில் மோதும்.