செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

கோலகலமாகத் தொடங்கியது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா!

Posted: 2016-04-08 12:47:06
கோலகலமாகத் தொடங்கியது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா!

கோலகலமாகத் தொடங்கியது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா!

ஐ.பி.எல். என அழைக்கப்படும் இந்தியன் பிறிமியர் லீக் ருவென்ரி-20 கிரிக்கெட்டின் 9 ஆவது தொடரின் தொடக்க விழா இன்று கோலகலமாக ஆரம்பமானது.

மும்பை சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் ஆரம்பமான இந்த நிகழ்வில் போட்டியில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் (கப்டன்: ரோஹித் சர்மா), புனே சுப்பர் ஜயன்ட்ஸ் (டோனி), கொல்கத்தா நைற் ரைடர்ஸ் (கௌதம் கம்பீர்), டெல்லி டேர் டெவில்ஸ் (சகீர்கான்), குஜராத் லயன்ஸ் (சுரேஷ் ரெய்னா), கிங்ஸ் லெவன் பஞ்சாப் (டேவிட் மில்லர்), றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் (விராட் கோலி), ஹைதராபாத் சன் ரைசர்ஸ் (டேவிட் வோர்ணர்) அணிகளின் அறிமுகம் முதலில் இடம்பெற்றது.

இதையடுத்து கடந்த வருடம் கிண்ணத்தைக் கைப்பற்றிய அணியின் தலைவர் ரோஹித் சர்மா கிண்ணத்தைத் திரும்ப வழங்கினார்.

அடுத்து இம்முறை போட்டியில் இடம்பெறவுள்ள மாற்றங்கள் குறித்து அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பொலிவூட் நடிகை கத்ரீனா கைப் மற்றும் பல நடிகைகளின் நடனங்கள் வண்ண வண்ண விளக்குகள் வாண வேடிக்கைகள் இடம்பெற்றன.

சிறப்பாக மேற்கிந்தியத்தீவுகளின் வீரர் பிராவோ சம்பியன் என்ற பாடலை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.