செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

முதல் வெற்றியைப் பதிவு செய்தது டோனியின் புனே!

Posted: 2016-04-09 23:08:34
முதல் வெற்றியைப் பதிவு செய்தது டோனியின் புனே!

முதல் வெற்றியைப் பதிவு செய்தது டோனியின் புனே!

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்திலேயே நடப்புச் சம்பியனான மும்பை இந்தியன்ஸை 9 விக்கெட்களால் ரைசிங் புனே சுப்பர் ஜியான்ட்ஸ்.

இந்தத் தொடரில் களமிறங்கியுள்ள இரு புதிய அணிகளில் ஒன்றான புனே தனது அறிமுக ஆட்டத்திலேயே அமர்க்களப்படுத்தியிருக்கிறது. அந்த அணியின் தொடக்க வீரர் ரஹானே 42 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்கள் குவித்தார்.

மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை அணி துடுப்பெடுத்தாடியது. சிம்மன்ஸும், ரோஹித் சர்மாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரில் அசத்திய ரோஹித் சர்மா 7 ஓட்டங்களுடன் இஷாந்த் சர்மா வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஹார்திக் பாண்டியா களமிறங்க, ஆர்.பி.சிங் வீசிய 3-ஆவது ஓவரில் சிக்ஸரை விளாசிய சிம்மன்ஸ், இஷாந்த் சர்மா வீசிய அடுத்த ஓவரில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அவர் 8 ஓட்டங்கள் எடுத்தார்.

5 ஆவது ஓவரை வீசிய மிற்சல் மார்ஷ், ஹார்திக் பாண்டியா (9), ஜோஸ் பட்லர் (0) ஆகியோரை வீழ்த்த, 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது மும்பை.

இதன்பிறகு ராயுடுவுடன் இணைந்தார் கிரண் போலார்ட். இந்த இணை 10 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. 8 பந்துகளைச் சந்தித்த பொலார்ட் ஒரு ஓட்டத்தை மட்டுமே எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த ஷ்ரேயாஸ் கோபால் 16 பந்துகளில் 2 ஓட்டங்களுடன் வீழ்ந்தார். அப்போது 11 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 51 ஓட்டங்கள் எடுத்திருந்தது மும்பை.

இதையடுத்து ராயுடுவுடன் இணைந்தார் ஹர்பஜன் சிங். இந்த ஜோடி அடுத்த 4.1 ஓவர்களில் 17 ஓட்டங்கள் சேர்த்தது. ராயுடு 27 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்து அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வினய் குமார் 12 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, மக்கிளன்நகன் களம்புகுந்தார்.

கடைசிக் கட்டத்தில் அதிரடி காட்டிய ஹர்பஜன் சிங், ஆர்.பி.சிங் வீசிய 19 ஆவது ஓவரில் 3 பௌண்டரிகளையும், இஷாந்த் சர்மா வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர், இரு பௌண்டரிகளையும் விளாசினார். கடைசி 2 ஓவர்களில் 31ஓட்டங்கள் கிடைக்க, மும்பை 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 121 ஓட்டங்கள் சேர்த்தது. ஹர்பஜன்சிங் 30 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பௌண்டரிகளுடன் 45, மக்கிளன்நகன் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பின்னர் ஆடிய புனே அணிக்கு அஜிங்க்ய ரஹானே - டூபிளெஸ்ஸிஸ் ஜோடி அதிரடி தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. மக்கிளன்நகன் வீசிய முதல் ஓவரிலேயே இரு பெளண்டரிகளை விளாசி அதிரடியில் இறங்கினார் ரஹானே. அவருகக்கு இணையாக டூ பிளசிஸும் ஆட, 9 ஓவர்களில் 76 ஓட்டங்களை எட்டியது புனே.

ஹர்பஜன் சிங் வீசிய 10-ஆவது ஓவரில் ஸ்வீப் ஷொட் அடிக்க முற்பட்ட டூ பிளசிஸ் 'போல்ட்' ஆனார். அவர் 33 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பௌண்டரியுடன் 34 ஓட்டங்கள் எடுத்தார்.

இதையடுத்து கெவின் பீற்றர்சன் களம்புகுந்தார். மறுமுனையில் அசத்தலாக ஆடிய ரஹானே 32 பந்துகளில் அரைச்சதம் கண்டார். இதனால் எளிதில் வெற்றியை நெருங்கியது புனே. பாண்ட்யா வீசிய 15 ஓவரில் ரஹானே இரு சிக்ஸர்களை விளாச, 14.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்கள் எடுத்து வெற்றி கண்டது புனே.

ரஹானே 66, பீற்றர்சன் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.