செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மாமுனையில் கணவன், மனைவி மீது கடும் தாக்குதல்! - படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்ப்பு; இருவர் கைது

Posted: 2016-04-19 12:59:28
மாமுனையில் கணவன், மனைவி மீது கடும் தாக்குதல்! - படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்ப்பு; இருவர் கைது

மாமுனையில் கணவன், மனைவி மீது கடும் தாக்குதல்! - படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்ப்பு; இருவர் கைது

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று, மாமுனைப் பகுதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த கணவன், மனைவி மீது கொடூரத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்கள் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த எஸ்.ஜெயக்குமார் (வயது - 30), ஜெயக்குமார் கசீனா (வயது - 27) ஆகியோர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்கியதன் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முரண்பாடே இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என்று பளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.