செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

இலங்கை கிரிக்கெட் வீரர் கௌசல் சில்வா தலையில் பந்து அடிபட்டு காயம்!

Posted: 2016-04-24 11:17:28 | Last Updated: 2016-04-24 11:19:33
இலங்கை கிரிக்கெட் வீரர் கௌசல் சில்வா தலையில் பந்து அடிபட்டு காயம்!

இலங்கை கிரிக்கெட் வீரர் கௌசல் சில்வா தலையில் பந்து அடிபட்டு காயம்!

இலங்கை கிரிக்கெட் வீரர் கௌஷல் சில்வா, பயிற்சியின் போது தலையில் பந்து அடிபட்ட காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்காக, கண்டி பல்லேகெல மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோதே, இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர் கௌஷல் காயமடைந்துள்ளார்.

உடனடியாக கண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக விமானம் மூலம் அவர் கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

விக்கெட்டுக்கு அருகே களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தபோது, தினேஷ் சந்திமால் அடித்த பந்தே கௌஷாலின் தலையில் பட்டுள்ளது.

தலையில் பந்து பட்ட பின்னர் சக அணி வீரர்களுடன் பேசிக் கொண்டிருந்த கௌஷல், அதிர்ச்சிக்கு உள்ளாகியவராக காணப்பட்டதாக அங்கிருந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் கூறினார். எனினும் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்றே கூறப்படுகின்றது.

இங்கிலாந்து சுற்றுப் பயணத்தை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை நடந்த பயிற்சி போட்டியில் கௌஷல் சில்வா சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.